வணக்கம்!
இன்றைய காலத்தில் துல்லியமான ஒரு ஜாதகத்தை கணித்துவிடமுடியும். நிறைய சாப்ட்வேர்கள் அதற்கு உதவகின்றன. அதனை வைத்து நீங்கள் துல்லியமான நட்சத்திரம் எது எந்த பாதத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்று பல விசயங்களை நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.
ஏனோ வாழ்ந்தால் போதும் என்றும் நினைப்பவர்களுக்கு சோதிடம் எல்லாம் தேவையில்லை. நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சோதிடம் தேவை. இருக்கின்ற கொஞ்ச காலத்தை நன்றாக அனுபவித்துக்கொண்டு செல்லவேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக உங்களின் ஜாதகத்தை எடுத்து அலசி ஆராயவேண்டும்.
இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் அவசர சூழ்நிலை மாதிரி வாழ்க்கை சென்றாலும் நிதானமாக இதனை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு செல்லும் நபர்களுக்கு மட்டுமே சோதிடம் வழி வகுக்கும்.
சோதிடத்தை நன்றாக ஆராய்வதற்க்கே அதாவது நீங்கள் பார்ப்பதற்க்கு கூட உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும். குரு கிரகம் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களின் வாழ்க்கை இரகசியத்தை ஆராயமுடியும்.
குரு கிரகம் சரியில்லை என்றால் அவரின் அப்பா அல்லது அவரின் தாத்தா நல்லது செய்து இருந்தால் அவர்களுக்கும் இந்த இரகசியத்தை அறியமுடியும். இதனை நீங்கள் படிக்கும் உங்களுக்கு கண்டிப்பாக குரு கிரகம் அல்லது உங்களின் முன்னோர்கள் நல்லது செய்து இருக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment