வணக்கம்!
நாம் ஒரு கோவிலுக்கு செல்கிறோம். கோவிலுக்கு வாசலில் பிச்சைக்காரர்கள் இருப்பார்கள். பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்துவிட்டு அதன் பிறகு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வருகிறோம்.
ஒரு கோவில் வழிபாடே இப்படி இருக்கும்பொழுது நாம் பரிகாரம் செய்வது என்றால் எப்படி இருக்கும். அதனால் தான் சொல்லுகிறேன் எந்த ஒரு ஆன்மீக நிகழ்வுகள் இருந்தாலும் அந்த ஆன்மீக நிகழ்வுகளுக்கு முன்பு ஒரு தர்மத்தை வைத்து அதனை நடத்தியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
பாக்கியஸ்தானத்திற்க்கு நீங்கள் செய்யவேண்டியது இது தான். பாக்கியஸ்தானம் என்று சொல்லும்பொழுது அதன் அதிபதிக்கு சென்று பூஜை செய்வது கிடையாது. பாக்கியஸ்தானத்திற்க்கு உரிய தர்மத்தை செய்துவிட்டு அடுத்தது உங்களின் பூஜை மற்றும் வழிபாடுகளை வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாளும் முடிந்தளவுக்கு உங்களின் வீட்டில் ஒருவருக்கு அதிகமாக சமைத்து அதனை அன்னதானமாக செய்யவேண்டும். ஆண்கள் நினைத்தால் கூட சில பெண்கள் இதனை செய்வதில்லை. இவர்க்கு வேலை இல்லை ஏதாவது சொல்லுவார் என்று அலுத்துக்கொண்டு இதனை செய்யாமல் விட்டுவிடுவார்கள். என்னிடம் பேசிய பல நண்பர்கள் இதனை சொல்லியுள்ளனர். அவர்கள் எல்லாம் வெளியில் உணவத்தில் வாங்கி இதனை செய்துள்ளனர்.
நிறைய தர்ம காரியங்களை செய்தாலே போதும் உங்களுக்கு ஏற்படும் செலவுகள் குறைவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கின்றது. தேவையில்லாமல் கொண்டு சென்று சம்பந்தம் இல்லாமல் செலவு செய்வதைவிட இப்படி தர்ம காரியம் செய்து வாழ்வை வளமாக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment