Followers

Tuesday, June 28, 2016

செவ்வாய் பலன்


ணக்கம்!
          எந்த இடத்திலும் தவறு செய்தாலும் செவ்வாய் காரத்துவம் உடைய இடத்தில் தவறு செய்தால் செவ்வாய் கிரகத்தால் வரும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். 

நிலத்தின் மீது ஆசை அனைவருக்கும் மிக அதிகமாக இருக்கும். நிலத்தின் மீது ஆசை இருந்தால் அதனை பெறுவதற்க்கு செவ்வாய் கிரகத்தை வழிப்பட்டு நேர்மையான வழியில் அதனை பெறவேண்டும்.

ஒரு சிலருக்கு நிலத்தின் மீது ஆசைப்பட்டு அதனை பெறுவதற்க்கு தவறான வழியில் முயற்சி செய்து பெறுவார்கள். அடுத்தவர்களின் நிலத்தின் மீது ஆசைப்பட்டு அதனை குறுக்குவழியில் பெறுவார்கள். அப்பொழுது தான் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது.

ஒரு சில ஜாதகங்களுக்கு தீர்வு பெறாமல் போவதற்க்கு இது முக்கிய காரணமாக இருக்கின்றது. பல ஜாதகர்களின் தந்தை குறுக்குவழியில் பிறர் நிலத்தை ஏமாற்றி பெற்று இருப்பார்கள். அவர்களின் வாரிசுகள் தற்பொழுது பிரச்சினையில் சிக்கி தவிப்பார்கள். அவர்களுக்கு எல்லாம் தீர்வு பெறுவது கடினம்.

நிலத்தின் மீது ஆசைபடுங்கள் அதனை பெறுவதற்க்கு செவ்வாய் கிரகத்தினை வழிபட்டு அதனை நல்ல வழியில் பெறுங்கள். செவ்வாய் கிரகத்தை வழிபடும்பொழுதே நல்ல வழியில் கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: