Followers

Monday, June 6, 2016

சந்திர தசா


வணக்கம்!
          சந்திர தசா ஒருவருக்கு நடந்தால் சந்திரன் இருக்கும் வீட்டை பொறுத்து பலன் அமையும். சந்திரனுக்கு எந்தவித தீயகிரகங்களின் பார்வை இல்லை என்றால் பலன் அவர்களுக்கு முழுமையாக கிடைத்துவிடும்.

சந்திர தசாவில் நல்ல நிலைக்கு வந்தவர்களும் இருக்கின்றார்கள். அதே சந்திரதசாவில் வீணாக போனவர்களும் இருக்கின்றார்கள். சந்திர தசா நடக்கும்பொழுது கோச்சாரப்படி தீய கோச்சாரபலன்களும் நடக்காமல் இருந்தால் நல்ல பலனை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

சந்திரதசாவில் ஒருவருக்கு ஏழரை சனி நடைபெறகூடாது. ஏழரைசனி நடக்கும்பொழுது சந்திரதசாவாக இருந்தால் அதிகமான தீயபலன்களை கொடுத்துவிடுகிறது.

சந்திரதசாவில் ஏழரை ஆண்டுகள் சனிக்கு சென்றுவிட்டால் அப்புறம் பலனை எப்படி எதிர்பார்க்க முடியும். சரி ஒரு சிலருக்கு அப்படி ஏழரை நடந்தால் அவர்கள் என்ன செய்வது என்று கேட்கலாம். உங்களின் ஜாதகத்தை பார்த்து அதற்கு பரிகாரம் செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: