வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பார்க்கலாம். இதுவரை சொன்ன செய்தியில் இருந்தே குரு தசாவைப்பற்றி ஒரளவு புரிந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து பல தகவல்களை பார்க்கலாம்.
ஒருவருக்கு ஆன்மீகத்தின் மேல் ஈடுபாடு ஏற்படும். அவர்களும் ஊர் ஊராக கோவில் குளங்கள் என்று சுற்றுவார்கள். என்ன தான் நாம கோவில் குளங்கள் என்று சுற்றினாலும் அவர்களுக்கு ஒரு குரு அமையவேண்டும். அப்படி குரு அமையும்பொழுது மட்டுமே முழுமை அடையமுடியும். அனைவரும் குருவுக்காக தேடி அலைவது இயற்கை. என்ன தான் நாம குருவை தேடி அலைந்தாலும் தகுந்த குரு இந்த நாளில் கிடைப்பது என்பது குதிரை கொம்பு.
நான் குருவாக வருகிறேன் என்று சொல்லுபவர்கள் கூட முழுமை பெறாமல் இருக்கின்றனர். அதனையும் தாண்டி ஒரு குருவை நாடும்பொழுது அவர்கள் ஒன்றை நமக்கு திணிக்கின்றனர் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர்.
இப்படி எல்லாம் இன்றைய குருவின் நிலை இருக்கும்பொழுது நமக்கு ஒரு நல்ல குரு கிடைத்தால் நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைந்துவிடலாம் என்ற எதிர்ப்பு அனைவரிடமும் இருக்கின்றது.
அனைவரிடமும் இந்த எதிர்பார்ப்பு இருந்தாலும் குரு தசா நடப்பவர்களுக்கு அதிகப்பட்சமாக நல்ல குரு அமைவதற்க்கு வாய்ப்பு இருக்கும். குரு கிரகம் ஒரு குருவை உங்களுக்கு தந்துவிடுவார்.பிறகு என்ன ஆன்மீகத்தில் நீங்கள் முன்னேறிவிடுவீர்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment