Followers

Monday, December 2, 2013

பூர்வ புண்ணியம் 58


வணக்கம் நண்பர்களே!
                    பூர்வபுண்ணியத்தை பொருத்து வாழ்க்கை அமையும் என்று கடந்த பதிவில் சொல்லிருந்தேன். பொதுவாக நமது பதிவுக்கு வரும் நபர்கள் தொடர்ச்சியாக நமது பதிவை படித்துக்கொண்டே இருந்தால் அதாவது ஒரு மாதகாலம் அதற்கு மேற்ப்பட்ட காலங்கள் படித்தாலே அவர்களின் ஆத்மா ஒரு எல்லையை தொடநினைக்கிறது என்று அர்த்தம் தான் வேறு ஏதும் இருக்கமுடியாது. 

ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் ஆன்மீகம் மற்றும் சோதிடம் சம்பந்தமாக எத்தனையோ பதிவுகள் எழுதிக்கொண்டு இருக்கின்றனர். அதில் இல்லாத விசயம் ஜாதககதம்பத்தில் இருக்கும். ஜாதககதம்பத்தில் இருக்கும் விசயம் கடவுளின் தன்மையை அடைய செல்ல நினைக்கும் ஆத்மாவிற்க்கு மட்டுமே இது ஒரு பொக்கிஷம் என்பது தெரியும் வேறு யார்க்கும் இது கண்டிப்பாக பிடிக்காது.

பொதுவாக வெளிஉலகத்தில் உள்ள மனிதர்களுக்கு இது பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் ஆனால் எந்த ஆத்மா இருப்பை தேடுகின்றதோ அந்த ஆத்மாவிற்க்கு நான் எழுதும் விசயங்கள் அனைத்தும் மிக தீவிரமாக படிப்பார்கள். காரணம் அதன் இருப்பை அந்த ஆத்மா அடைய நினைக்கிறது என்று அர்த்தம் மட்டுமே.

ஒரு சிலர் என்னிடம் பேசும்பொழுது சார் நான் இப்படி பேசிகிறேன் என்று தவறாக நினைக்காதீர்கள் என்று சொல்லுவார்கள். நான் தவறை ஏதும் சுட்டிக்காட்டினால் நீங்கள் தவறாக நினைக்கலாம். உங்களின் ஆத்மாவில படிந்திருக்கும் பூர்வ ஜென்ம வாசம் அப்படி செய்ய தோன்றுகிறது. அதனை செய்து உங்களின் ஆத்மா தன்னை திருப்திப்படுத்துகிறது இதனை தெரிந்ததால் மட்டுமே நான் பூர்வபுண்ணியத்தை பற்றி எழுதுகிறேன். நீங்கள் தவறு செய்யவில்லை உங்களின் பூர்வ ஜென்ம கணக்கு தவறை செய்கிறது. நான் ஒரு போதும் நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று சொல்லுவதில்லை. 

அனைத்து தவறுகளும் அங்கிருந்து தான் வருகின்றது. அது அடுத்தவர்களை பாதிக்காத வரை ஒன்றும் பிரச்சினை இல்லை. அடுத்தவரை பாதிக்கும்பொழுது உங்களுக்கு பிரச்சினை ஏற்படும். அவர் அவர்களுக்கு என்ன விருப்பமோ அதனை செய்கிறார்கள் நாம் ஏன் அதில் போய் தலையீடு செய்யபோகிறோம். இன்று நடக்கும் தவறு இன்று ஏற்பட்டதில்லை ஏதோ ஒரு காலகட்டத்தில் செய்த தவறு அதனால் அந்த தவறு மீண்டும் இன்று செய்யப்படுகின்றது.

உங்களுக்கு புரியும்படி சொல்லுகிறேன். உங்களின் பக்கத்து வீட்டுக்காரன் உங்களின் மீது காரணமே இல்லாமல் சண்டை இழுத்துக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு முன்ஜென்மத்தில் நீங்கள் அப்படி செய்திருப்பீர்கள் அதனால் அவன் இன்று உங்களை சண்டைக்கு இழுக்கிறான்.  தவறு முன்ஜென்மத்தில் நடந்திருக்கும்.ஒரு சிறிய தவறு பெரிதாகி இன்று பூதமாக வந்து நிற்க்கும்.

தொடர்ந்து அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: