வணக்கம் நண்பர்களே!
குரு இரண்டில் இருந்து குரு தசா நடைபெற்றால் எப்படி பலன் தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
குரு இரண்டில் நன்றாக அமர்ந்தால் குரு தசாவில் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும். செலவு செய்தாலும் எப்படியும் பணம் வரும். அப்புறம் என்ன உங்களுக்கு குரு தசா யோகம் தான்.
குடும்பத்தில் இருப்பவர்கள் நல்ல ஆதரவை உங்களுக்கு நீட்டுவார்கள். இன்றைய காலத்தில் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் பல பேர் முன்னேற்றம் அடையாமல் இருக்கின்றனர். அப்படி எல்லாம் இல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் உதவி இவர்களுக்கு கிடைக்கும்
இரண்டாவது இடம் என்பது நாம் பேசும் பேச்சை காட்டக்கூடிய இடம் என்பதால் இவர்கள் பேசுவது இனிமையாக அறிவுபூர்வமாக இருக்கும்.உங்களை பேசசொல்லி கேட்டுக்கொண்டே இருக்கலாம். குடும்பத்தில் புதிய நபர்களின் சேர்க்கை உண்டாகும்.
குரு இரண்டாவது வீட்டில் இருந்து ஆறாவது வீட்டினை பார்க்கும் அல்லவா ஆறாவது வீட்டை பார்க்கும்பொழுது நமக்கு நல்ல வேலைக்காரர்களை தருவார். அவர்கள் வழியாக நாம் உயர்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. எதிர்கள் பிரச்சினை கொடுக்கமாட்டார்கள். நல்லபடியாக ஜூரணமாகும்.
குரு ஒன்பதாவது பார்வையாக பத்தாவது வீட்டை பார்ப்பதால் தொழில் வாய்ப்பு உங்களுக்கு தேடி வரும். தந்தையார் அனுசரனையாக நடந்துக்கொள்வார். நீங்கள் வேலை செய்யும் கம்பெனியில் உங்களின் அறிவின் வளர்ச்சியால் மிகப்பெரிய பதவி உங்களுக்கு கிடைக்கும்.
உங்களின் துணைவரின் வழியில் சுகமான வாழ்க்கை கிடைக்கும்.உங்களின் தந்தையார் உங்களுக்கு பணஉதவி செய்வார். மொத்தத்தில் நல்லது நடக்கும். கண் பார்வை நன்றாக இருக்கும்
குரு கெட்டால் மேலை சொன்ன நற்பலன்களுக்கு எதிராக உங்களுக்கு பலனை தரும். நீங்களே கணித்துக்கொள்க.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment