வணக்கம் நண்பர்களே!
காயத்ரி மந்திரம் செய்பவர்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்ளுவது என்ன என்றால் உடனே எதுவும் கிடைத்துவிடாது. கஷ்டப்பட்டு மட்டுமே பெறமுடியும்.
நான் போராடி தான் வெற்றி பெற்றேன். பல நாட்கள் தனிமையில் அதுவும் காடுகளில் கூட இருந்து இருக்கின்றேன். குரு கிடைத்துக்கூட இதனை எல்லாம் செய்தேன் ஏன் என்றால் அப்பொழுது மட்டுமே நம்முடன் எந்த காலத்திலும் அது நிற்க்கும். நம்மை விட்டு போகாது. மலையில் தங்குவது என்பது அவ்வளவு எளிதான ஒரு காரியம் கிடையாது.
எந்த நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம்.அதனை எல்லாம் எதிர்க்கொண்டு வந்தபிறகு தான் நமக்கு ஒரு தெளிவு பிறக்கும். அப்பொழுது பிறர்க்கு நன்மையளிக்கமுடியும். நீங்கள் வீட்டிற்க்குள் இருந்துகூட விடியற்காலையில் எழுந்து செய்வதில்லை.
ஒரு துளி சந்தேகம் கூட வைக்ககூடாது. முழுமையாக நம்பவேண்டும். அப்படி நம்பும்பொழுது மட்டுமே நாம் செய்கின்ற பயிற்சியில் வெற்றி பெறமுடியும். பல பேர் நம்பிக்கை இல்லாமல் ஏதோ செய்வோம் என்று செய்வார்கள்.
நான் இன்று வியாபாரத்திற்க்கு செய்துக்கொடுப்பது எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் செய்கின்றேன். நான் வைத்திருக்கும் அம்மன் மீது அப்படி ஒரு நம்பிக்கை. இது போல் நீங்கள் செய்யும் பயிற்சியில் வைக்கவேண்டும். அப்படி நம்பிக்கை வைக்கும்பொழுது எளிதில் நீங்கள் மந்திரப்பயிற்சியில் வெல்லமுடியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
வணக்கம்...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_5.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வணக்கம் சார் தளத்தை பார்வையிட்டேன்.
நன்றி சார்.
Sariyana badhil sir.
Post a Comment