Followers

Wednesday, December 4, 2013

ஆன்மீக அனுபவங்கள் 137


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் தைலத்தைப்பற்றி கேட்டு போன் செய்திருந்தார்கள். நல்ல விழிப்புணர்வு இருக்கின்றது. அனைவரும் செய்து பாருங்கள். அனைத்து மதத்திலும் அடிப்படையாக பயன்படுத்தும் பொருள் மூலிகைகள் மட்டுமே.

உலகத்தில் உள்ள எந்த மதத்தின் வழிப்பாட்டிலும் மூலிகை இல்லாமல் வழிபாடு இருக்காது. எப்படியும் ஒரு மூலிகையாகவது பயன்படுத்துவார்கள். நமது மதத்தில் அதிகமாக மூலிகையை பயன்படுத்துவார்கள். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் பல மூலிகைகயை பயன்படுத்தி தான் ஆகவேண்டும்.

ஒவ்வொரு கோவிலிலும் தலவிருட்சம் இருக்கும் அதுவும் ஒருவகையில் மூலிகை குணம் கொண்டதாக இருக்கும்.மூலிகை வகையில் உங்களின் ஆன்மீகத்தை முன்னேற்றப்படுத்திக் கொள்ளுங்கள்.யோகா தியானம் இப்படி ஏதாவது செய்யவேண்டும் என்றால் நீங்கள் மூலிகையை பயன்படுத்த தேவையில்லை. 

சித்தர்களின் வழியில் அதிகமாக மூலிகைகளை பரிந்துரை செய்வார்கள். நீங்கள் சித்தர்களின் வழியில் செல்லும்பொழுது அவர்கள் பயன்படுத்தும் மூலிகைகளை பற்றி படித்து தெரிந்துக்கொள்வது உங்களுக்கு பயனளிக்கும்.

நான் ஒன்றும் சித்தர் கிடையாது நான் எல்லாவற்றையும் பின்பற்றி செய்பவன். அயல்நாட்டில் உள்ள மதத்தில் பயன்படுத்தும் விசயங்களை வைத்துக்கூட செய்பவன். ஒரு சில நேரங்களின் சித்தர்கள் பயன்படுத்தும் பொருள்களை கொண்டும் செய்திருக்கிறேன்.

நான் எப்படி பயன்படுத்துக்கிறேன். எப்படி எல்லாம் செய்கின்றேன் என்பதைப்பற்றி இதுவரை வெளியிடவில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன். அதனை எல்லாம் பொதுவில் எழுதிவைக்கும்பொழுது மிகப்பெரிய பிரச்சினையை அடுத்தவர்களுக்கு செய்ய கூடும் என்பதால் அப்படி வைக்கவில்லை. 

சதுரகிரி மலையில் நிறைய மூலிகைகள் கிடைக்கின்ற என்று நண்பர்கள் சொல்லிருந்தனர். நான் சதுரகிரிக்கு சென்றதில்லை. வடநாட்டில் இருந்து எடுத்து வந்த மூலிகைகளை பயன்படுத்துகிறேன். ஒரு சில மூலிகைகள் கேரளாவில் இருந்து எடுத்து வைத்திருக்கிறேன். நேபாளத்திலும் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. சதாசிவமலையில் கூட மூலிகைகள் கிடைக்கின்றன.

சாதாரணமாக பயன்படுத்தும் மூலிகைகள் நாட்டுமருந்துக்கடையில் கிடைக்கும். இம்காப்ஸ் நான் தங்கிருக்கும் கட்டிடத்திற்க்கு அடுத்த கட்டிடம தான் அங்கும் சில மூலிகை எண்ணெய் கிடைக்கின்றது வாங்கிக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: