வணக்கம் நண்பர்களே!
பூர்வபுண்ணியத்தைப்பற்றி பல தகவல்களை பார்த்தோம். நமது ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் ராகு கிரகம் இருக்கும்பொழுது அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்றால் இதனை செய்வோமா அல்லது வேறு மாதிரி செய்வோமா என்று ஒரு நினைப்பு இல்லாமல் செய்வார்கள்.
ராகு ஐந்தாவது வீட்டில் இருக்கும்பொழுது பல பிரச்சினைகளை முன்ஜென்மத்தில் இவர்கள் செய்திருக்கவேண்டும். நமது பழைய பூர்வபுண்ணியத்தில் ராகுவைப்பற்றி சொல்லிருப்பேன் படித்து பாருங்கள். முன்ஜென்மத்தில் பல மனது வழியாகவே இவர்கள் செய்யும்பொழுது அந்த பாதிப்பின் தொடர்ச்சியாகவே இந்த ஜென்மத்தில் அது வெளிப்படுகிறது.
முன்ஜென்மத்தில் பாதிப்பால் இந்த ஜென்மத்தில் இவர்களால் ஒரு உருப்படியான காரியத்தை செய்யமுடியவில்லை. இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் போட்டு குழப்பிவிட்டுக்கொண்டே இருப்பார்கள்.இந்த குழப்பம் இப்பொழுது வந்தது இல்லை முன்ஜென்மத்தில் வந்த ஒன்று.
முன்ஜென்மத்தி்ல் ஆணாக இருந்தால் பெண்களுக்கு பிரச்சினை காமம் ரீதியாக கொடுத்திருக்கவேண்டும். பெண்ணாக இருந்தால் காம் ரீதியாக ஆண்களை ஏமாற்றி இருக்கவேண்டும். இப்படி செய்வதால் இவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கும்.
உங்களின் ஜாதகத்தில் ராகு ஐந்தில் இருந்து உங்களுக்கு இந்த மாதிரியாக பிரச்சினை ஏற்படுகிறதா என்று கவனி்த்து பாருங்கள்.அப்பொழுது நான் சொல்லுவது புரியும். உங்களை சோதனை செய்வதற்க்கு நீங்கள தனியாக அமர்ந்து சிந்தனை செய்து பார்த்தால் இது புரியும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment