வணக்கம் நண்பர்களே!
பூர்வபுண்ணியத்தைப்பற்றி பார்க்கலாம். பூர்வபுண்ணியகணக்கில் கடைசி நேரத்தில் அதாவது மோட்சம் என்ற நேரம் வரும்பொழுது பூர்வபுண்ணியகணக்கில் நன்மையும் இருக்ககூடாது தீமையும் இருக்ககூடாது. வித்அவுட் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது போல இருக்கவேண்டும்.
எதையும் இங்கிருந்து எடுத்துக்கொண்டு செல்லவில்லை அதைப்போல் எதையும் இங்குவிட்டு விட்டு செல்லவில்லை என்ற நிலையில் மட்டுமே கடவுளை அடையமுடியும். ஐந்தாவது வீட்டில் இருந்த அனைத்து கணக்கும் சரிசமன்படுத்தப்பட்டு செல்லும்பொழுது கடவுளின் திருவடியை சரணடைய முடியும்.
ஐந்தாவது இடத்தை பொருத்தவரை நிறைய அடிப்படுபவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் வரும் என்பதை ஏற்கனவே நாம் பார்த்தோம். ஒவ்வொரு அடியிலும் நிறைய பாடங்களை மனிதன் கற்றுக்கொள்கிறான் அல்லவா. அப்படி நிறைய அடிகளை மனிதனுக்கு கற்றுக்கொடுப்பதில் ஐந்தாவது வீடு நிறைய தரும்.
நிறைய அடிகளை கற்க கற்க மனிதன் ஏன் இந்த வாழ்க்கை. வாழ்க்கையில் எந்தவிதத்திலும் சுவாரசியம் கிடையாது என்று நினைத்துக்கொண்டு அடுத்தது என்ன என்று தேடிப்பார்ப்பான்.அவனின் கண்களுக்கு ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பது அப்பொழுது மட்டுமே தென்படும்.
ஆன்மீகத்தை நோக்கி செல்லும்பொழுது பல தடைகளை அவர்கள் சந்திப்பார்கள் அந்த தடைகள் தான் அவர்களின் வாழ்வில் ஆன்மீகத்திற்க்கான முன்னேற்றம் அதனை கண்டு தோல்வி அடையாமல் தொடர்ந்து முன்னேறிச்செல்லுங்கள். உங்களுக்கும் ஒரு அற்புதவழியை கடவுள் திறந்துவிடுவார். அதனை வைத்து நீங்கள் தேறிவிடலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment