Followers

Monday, December 9, 2013

கேள்வி & பதில்


ணக்கம் ண்பர்களே!
குரு தசாவைப்பற்றி ஒரு கேள்வி வந்தது அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதே நேரத்தில்  நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஸ்ரவாணி said...
நல்வாக்கு சொல்லி உள்ளீர்கள்.
நான்கில் அமரும் போது குருவிற்கு கேந்திராதிபதி 
தோஷம் ஏற்பட்டுவிடாதா ? அதோடு அவர் பாதகாதிபதியாக 
இருப்பின் தீயபலன்கள் தான் நடைபெறுமா ? 

வணக்கம். குருவை பொருத்தவரை என்ன தான் கெட்டுருந்தாலும் ஒரு சில நல்ல பலன்களை கொடுக்காமல் இருப்பதில்லை. கேந்திராதிபதி தோஷம் இருந்தாலும் நன்மையே செய்கின்றது. 

எனது அனுபவத்தில் சதய நட்சத்திரக்காரர்களுக்கு குரு தசா அவ்வளவு நல்லது செய்வதில்லை. ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்ததால் பிரச்சினை செய்கின்றதா என்றும் தெரியவில்லை ஆனால் குரு தசா இவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை செய்கின்றது. 

மகரராசியில் குரு கிரகம் நீசமாகின்றது. மகரராசிக்கு குரு தசா மிகப்பெரிய அளவில் நன்மை செய்கின்றது. அவர்களுக்கு எல்லாவற்றையும் பெற்று தருகிறது.

மறைவு ஸ்தானம் எனும் சொல்லக்கூடிய இடத்தில் குரு கிரகம் அமர்ந்தாலும் நன்மை செய்வதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். பொதுவாக மறைவு ஸ்தானத்தில் அமர்ந்து குரு தசா நடைபெறும்பொழுது குரு தசாவின் சுயபுத்தியில் தான் அதிக கெடுதலை செய்கின்றது. பிறகு வரும் புத்திகள் நல்லதை செய்கி்ன்றது. 

நான் பார்த்த ஜாதகத்தில் பெரும்பாலும் குரு தசா நன்மை செய்கின்றது.குரு கெட்டு இருந்தாலும் அதிக அளவு செய்யாவிட்டாலும் ஒரளாவாவது நன்மை செய்துவிடுகிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

விரைவான விரிவான தனிப்பதிவு கண்டு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி.