Followers

Thursday, December 12, 2013

பூர்வ புண்ணியம் 63


ணக்கம் ண்பர்களே!
                    கடந்த பூர்வபுண்ணியத்தில் எந்தவித பாவத்தையும் புண்ணியத்தையும் எடுத்துசசெல்லகூடாது என்று சொல்லிருந்தேன் அல்லவா. இதில் கடவுளின் பங்கு எதுவும் இல்லையா என்று கேட்க மனது நினைக்கும்.

கடவுள் நமக்கு மனமிரங்கி அவரிடன் செல்லுவதற்க்கு துணை புரியமாட்டாரா நமது பாவத்தை மன்னிக்க மாட்டாரா என்ற அர்த்தத்தில் பார்த்தால் அவரும் மனரங்கி வருவார்

மனிதர்கள் எந்தநேரத்திலும் எதையாவது செய்துக்கொண்டே இருப்பவர்கள் அல்லவா. சும்மா இருக்கமாட்டார்கள். எதையாவது செய்யவேண்டும். சும்மா அப்படியே உட்கார்ந்துக்கொண்டு இருந்தாலும் யாருக்காவது போனை போட்டு எதையாவது பேசிக்கொண்டு இருப்பர்கள் அல்லவா. அந்த விதத்திலும் பாவம் சேரும். ஏன் என்றால் நேரிடையாக செய்யும் பாவத்தை விட மறைவாக எதையாவது தூண்டுவது அதிக பாவம் தரும் அல்லவா.

ஊரில் உள்ள விசயங்கள் அனைத்தையும் சொல்லிவிடுவார்கள். கேட்கும் மனிதன் சும்மா இருக்காமல் அவர் எதையாவது செய்ய பாவம் தொற்றிக்கொள்ளும். இப்படியும் பாவம் செய்வார்கள். மனதில் எந்த வித விசயம் இல்லாமல் ஒன்றுமே இல்லாத நிலையில் தான் கடவுளின் கடாட்ஷம் கிடைக்கும். 

குறைந்த பட்ச பாவத்தை குறைத்து உங்களுக்கு அவரின் திருவடியை தருவதற்க்கு உதவி செய்கிறார் என்று பல குரு நாதர்கள் சொல்லியுள்ளார்கள். கடவுளின் பங்களிப்பும் இருக்கும். நாமும் அதிகமாக பாவத்தை சேர்க்காமல் இருப்பதும் நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: