Followers

Thursday, December 12, 2013

கிரகங்கள் என்னைப் பார்த்து சிரிக்கும்


வணக்கம் நண்பர்களே!
                    கிரகங்கள் என்னைப் பார்த்து சிரிக்கும் என்பது ஒரு சில நண்பர்கள் என்னிடம் எனக்கு குழந்தை பிறக்கபோகின்றது அதற்கு மருத்துவர் எங்களிடம் நல்ல நேரத்தை பார்த்துக்கொண்டு வரச்சொல்லியுள்ளனர் என்று நீங்கள் நல்ல நேரத்தை கொடுங்கள் என்று கேட்பார்கள்.

பொதுவாக இந்த மாதிரியான வேலைகளை நான் பார்ப்பதில்லை. சரி கேட்கிறார்கள் என்று கிரங்களைப்பார்த்தால் அவர்கள் சொன்ன வாரத்தில் அதிகப்பட்சமான கிரகங்கள் அவுட்டாகி இருக்கும். எப்படி பார்த்தாலும் அதிகபட்சமாக பிரச்சினை தருவதாக தான் அமைகின்றது. இதனை பார்த்துவிட்டு நான் சொல்லிவிடுவது நீங்கள் வேறு சோதிடர்களிடம் சென்று கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன்.

நான் என்ன தான் நல்ல தேதியை பார்த்தாலும் நமக்கு கிரகங்கள் ஏதாவது ஒரு வழியில் ஆப்பு வைத்துவிடும். இதனை நான் பார்க்கும்பொழுது கிரகங்கள் என்னை பார்த்து சிரிப்பதுபோல் என் மனநிலையில் தென்படும்.

நண்பர்கள் வேறு ஒன்றையும் செய்ய சொல்லுவார்கள். என் குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்க்கு நீங்கள் பெயரை பார்த்து சொல்லுங்கள் என்று கேட்பார்கள். நாமும் நட்சத்திரத்தை எல்லாம் பார்த்துவிட்டு பெயரின் முதல் எழுத்தை சொன்னால் சார் நான் இப்படி பெயர் வைக்கலாம் என்று நினைக்கிறேன் என்று ஒரு உருபடாத எண் வருவது போல் பெயரை அவர்களே தேர்ந்தெடுப்பார்கள்.

கிரகங்கள் செய்ய வேண்டியதை செய்துவிடுகின்றது. நாம் எப்படி தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் வைக்கவேண்டிய ஆப்பை வைத்துவிடுகிறார்கள். நாம் தான் இன்னமும் புத்திசாலிப்போல் இதனை எல்லாம் செய்துக்கொண்டு இருக்கின்றோம்.

இந்த மாதிரியான வேலைக்கு என்னை அன்புடன் தொடர்புக்கொள்ள வேண்டாம் நண்பர்களே. இதனால் எனக்கு வாடிக்கையாளர்கள் குறைந்தாலும் பரவாயில்லை இதனை செய்யவேண்டாம் என்று என் மனது நினைக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: