Followers

Thursday, December 5, 2013

சோதிடபலன் கேட்கும்பொழுது


வணக்கம் நண்பர்களே!
                    என்னிடம் ஜாதகபலன் கேட்கும்பொழுது நமது நண்பர்களுக்கு ஒரு சில கருத்துக்களை சொல்ல ஆசைப்படுகிறேன்.

நமது ஜாதககதம்பத்தில் வந்த தலைப்பை தவிர வேறு தலைப்பில் கேள்விகளை கேட்காதீர்கள். மற்ற சோதிடதளங்களில் படித்துவிட்டு சார் எனக்கு அந்த யோகம் இருக்கிறது. இந்த கிரகங்கள் இப்படி மாறினால் ஏதோ ஒரு பெயர் சொல்லி அதனைப்பற்றி சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்காதீர்கள். யார் அதனைப்பற்றி எழுதியுள்ளார்களோ அவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

எனது சோதிடஅறிவு என்பது அனுபவத்தால் ஏற்பட்ட ஒன்று. நான் புத்தகத்தில் இருந்து பெற்றது கிடையாது. ஒரு சில புத்தகத்தில் அடிப்படை அறிவை படித்து தெரிந்துக்கொண்டேன் அவ்வளவு தான் என்னிடம் உள்ள அறிவு. நீங்கள் கேட்கும் கேள்வி எல்லாம் பல்கலைகழகத்தில் சோதிடத்தில் ஆராய்ச்சி பெற்றவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளும் கேள்வியாக இருக்கின்றது.

ஜாதககதம்பத்தில் சோதிடத்தைப்பற்றி எழுதியவைகளில் எந்த புத்தகத்தையும் மேற்கோள் காட்டி நான் எழுதியது கிடையாது. ஏன் என்றால் அனைத்தும் எனது அனுபவ அறிவை வைத்து எழுதியவை மட்டுமே. ஜாதககதம்பத்தில் என்ன இருக்கின்றதோ அதனைப்பற்றி கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.

நான் ஒரு தொழில்முறை சோதிடன். என்னிடம் வருபவர்களுக்கு பலனை சொல்லிவிட்டு அதற்கு தகுந்த தீர்வை நான் கொடுக்கவேண்டும் அது மட்டும் தான் எனது வேலை. அதனை விட்டு விட்டு வரும் நபர்களிடம் சனி பகையாக இருக்கின்றது குரு நீசமாக இருக்கின்றது. அந்த கிரகம் அப்படி இருக்கின்றது என்று நான் பலன் சொன்னால் ஒரு ஆள் கூட என்னை தேடி வரமாட்டார்கள். ஜாதககதம்பம் வழியாக வருபவர்களுக்கு மட்டும் கிரகங்களைப்பற்றி சின்ன தகவல்களை சொல்லுவேன்.

ஒரு தொழில் அதிபரிடம் போய் நாம் சோதிடபாடத்தை நடத்திக்கொண்டிருந்தோம் என்றால் கிளம்பி போய்விடு என்று சொல்லிவிடுவார்க்ள். அவர்களின் பிரச்சினை என்ன அதற்கு தீர்வு என்ன அதனை மட்டும் நாம் சொல்லவேண்டும். அவர்கள் இதனை தீர்த்துக்கொடுங்கள் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பார்கள். நாம் செய்துக்கொடுத்துவிட்டால் நமது வேலை முடிந்துவிடும். அந்த தொழில்அதிபர்கள் வழியாக நமக்கு நிறைய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

ஒரு காலத்திலும் ஒருவனாலும் சோதிடத்தை படித்து முழுமை பெறமுடியாது. ஒரு கட்டத்தில் ஆயிரம் கோடி தகவல் உள்ளது. அதனை எல்லாம் படிப்பதற்க்கு நமக்கு இந்த ஜென்மம் போதாது. கொஞ்சம் படித்தால் போதும். படிப்பது என்பது வேறு களத்தில் இறங்கி பலனை சொல்லுவது என்பது வேறு. நீங்கள் படிப்பிலேயே இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது. களத்தில் இறங்கி வேலை செய்து பாருங்கள் அப்பொழுது புரியும்.

நான்கு சோதிடபுத்தகத்தை வாங்கி படித்துக்கொண்டு இருந்த நேரத்தில் எனக்கு ஒரு தலைகணம் இருந்தது. என்னிடம் சோதிடம் பார்க்க இவ்வளவு கட்டணம் என்று சொல்லிக்கொண்டு இருந்தேன். மாதத்திற்க்கு ஒருவர் வந்தாலே பெரிய விசயமாக இருந்தது. ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். தனியார் மருத்துவரிடம் சென்றால் அவருக்கு அந்தளவுக்கு விசய ஞானம் இருக்காது. ஒரு நோயாளியை ஒரு நாள் முழுவதும் சோதனை செய்துக்கொண்டு இருப்பார். அரசாங்க மருத்துமனையில் வேலை செய்யும் மருத்துவர்களிடம் சென்றால் ஒரு நிமிடத்தில் வேலை முடிந்துவிடும். நீ அரசாங்க மருத்துவராக சோதிடத்தில் இரு என்றார். 

அவர் சொன்னது எனக்கு ஏதோ செய்தது போல் இருந்தது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு சோதிடத்தை அனைவருக்கும் பார்க்க ஆரம்பித்தேன். ஏழை எளிய மக்களிடம் சோதிடபலனை சொன்னேன். சோதிடஅறிவு படிக்காமலேயே எனக்கு வந்தது. நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

களத்தில் வேலை செய்யும்பொழுது மட்டுமே நமக்கு சோதிடபலன் சொல்லுவது எப்பேர்ப்பட்ட காரியம் என்பது புரியும். ஆயிரம் புத்தகத்தை படித்தால் நீங்கள் பாடம் நடத்தலாம். ஆயிரம் பேரை நீங்கள் சந்தித்தால் நீங்கள் சோதிடத்தில் பாடத்தை உருவாக்குபவனாக மாறலாம் எது வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

7 comments:

Anonymous said...

முற்றிலும் சரியான கருத்து.
பலமாக ஆமோதிக்கிறேன்.
படிப்பறிவோடு அனுபவம் சேரும் போது
மட்டுமே எந்த கலையும் முழுமை பெறும்.

rajeshsubbu said...

வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி

Unknown said...

மனம் திறந்து எழுதியுள்ளீர்கள் நண்பரே..... உங்களது இந்த குணம்தான் எனக்கு மிகவும் பிடித்தது, உங்களது பதிவுகளையும் படிக்க தூண்டுகிறது. நன்றி.

rajeshsubbu said...

வணக்கம் suresh சார் தங்களின் வருகைக்கு நன்றி

தமிழ்செல்வன் said...

Only studying books and memorise is not use... Practical makes good knowledge.
ThnQ sir..

Unknown said...

Namaskaram sir,
You said rightly. More people comming means we can get more horoscopes for analysis and there by additional knowledge gain will be there. I mean practical knowledge. reading more and analysing more horoscope will fetch good results.
I appreciate your lovely way of presenting the article which will help a beginer like me to understand.

Thank you very much sir.

P.POOMARI
Rajapalaiyam

rajeshsubbu said...

வணக்கம் P.POOMARI ஐயா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.