Followers

Thursday, December 5, 2013

கேள்வி & பதில்

வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் இன்று ஒரு கேள்வி கேட்டு அனுப்பிருந்தார். அவரின் கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

கேள்வி

ராகு தசா நடைபெறும் காலத்தில் அதிகம் புற்றுநோயை தற்சமயம் ஏற்படுத்துகிறது. புற்றுநோயை உருவாக்குவதில் ராகுவும் குருவும் சேர்ந்து தான் ஏற்படுத்துவார்கள். //

வலைச்சரம் வழியே இங்கு வந்தேன். 


ராகு தசை காலத்தில் பொதுவாக உடல் நலம் பாதிக்க வாய்ப்பு இருக்கும் என்று சொல்லுங்கள். 

ராகு தசை குரு புக்தி காலத்தில் உடல் நலம் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லுங்கள்.
ஆட்சேபம் இல்லை.


ஆனால், ராகு தசை குரு புக்தி ஜோதிடம் தோன்றிய காலத்திலே இருந்து இருக்கத்தான் செய்கிறது.

ஏதோ தற்சமயம் அது புற்று நோய் ஏற்படுத்துகிறது என்ற புதிர் போட்டது எனக்கு 
சிரிப்பாக வருகிறது.


எந்த புத்தகத்தில், அதாவது பழைய க்ரந்தங்களில், அதாவது ப்ருஹத் ஜாதகம், கால ப்ரகாசிகா, கேரள ஜோதிடம் 

இது பற்றி ஏதேனும் குறிப்புகள் கண்டீர்களா அல்லது அது உங்கள் ஆராய்ச்சியா ??

இல்லை, ராகு தசை வந்தாலே கஷ்டம், நோய், கடன் என்று எல்லாம் போட்டு பயமுறுத்த பார்க்காதீர்கள். 


ராகு ஒருவரது ஜாதகத்தில் எந்த இடத்தில் எந்த ராசியில் எந்த பாவாதிபனாக, எந்த நக்ஷத்திரத்தின் பாதத்தில், 

எந்த கிருஹங்கள் பார்வையில் இருக்கிறார் என்பதையெல்லாம் பார்க்கவேண்டும். 

மேலும், ராகு இருக்கும் இடத்தின் அதிபனைக்கொண்டு ராகுவின் பலனையும் சொல்லவேண்டும். ராகுவை யார் பார்க்கிறார்கள் என்பதையும் கண்டறியவேண்டும். அவரது திக் பலன் என்ன என்பதைக் கணக்கிடுதல் முக்கியம். சனிவத் ராகு குஜவத் கேது என்று வசனமும் இருக்கிறது. சனி ஆயுஷ்காரகன். அவன் ஒரு ஜாதகத்தில் வலுவாகவும், லக்னாதிபனாக இருந்தாலோ அல்லது ராகு லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் இருந்தாலோ, அல்லது ஜாதகர் ஆயுளில் ராகு வருவதற்கே இல்லை என்று கண்டாலும், ராகு வைப் பார்த்து பயப்பட தேவையில்லை. 


ராகு ஒரு சாயா கிருஹம். அது நன்மையும் செய்யும் கெடுதலும் செய்யும். 

அதற்கான வாய்புக்களை ஆராய, 
அஷ்டவர்க்கத்தில் ராகுவின் பரல்கள் எத்தனை என்றும் கணக்கிடுதல் அவசியம். 


ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. 


ஒரு விஷயம் சொல்லவேண்டும்.


பலானி க்ருஹச்சாராணி சூசயிந்தி மனீஷினஹ என்பது வாக்கியம். கிருஹஙகள் என்ன செய்யலாம் என்று ஒரு கோடி காண்பிக்கத்தான், பல தீபிகாவும், பிருஹத் ஜாதகமும், ஜோதிடரை பணிக்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று எந்த ஒருவராலும் சொல்ல இயலாது.


நீங்கள் இதை பிரசுரிக்கவேண்டும் என்பது என் கருத்து அல்ல. அதை தீர்மானிக்க வேண்டியது நீங்கள் தான்.


சுப்பு தாத்தா. 


பதில்

வலைச்சரம் வழியே இங்கு வந்தற்க்கு வாழ்த்துக்கள். 

//* ராகு தசை காலத்தில் பொதுவாக உடல் நலம் பாதிக்க வாய்ப்பு இருக்கும் என்று சொல்லுங்கள். 

ராகு தசை குரு புக்தி காலத்தில் உடல் நலம் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் சொல்லுங்கள்.

ஆட்சேபம் இல்லை.

ஆனால், ராகு தசை குரு புக்தி ஜோதிடம் தோன்றிய காலத்திலே இருந்து இருக்கத்தான் செய்கிறது.

ஏதோ தற்சமயம் அது புற்று நோய் ஏற்படுத்துகிறது என்ற புதிர் போட்டது எனக்கு 
சிரிப்பாக வருகிறது. *//


உலகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நோய்கள் வந்துக்கொண்டு தான் இருக்கும். அந்த காலத்தில் புற்றுநோய் என்பதற்க்கு வேறு பெயர் கொண்டு அழைத்திருக்ககூடும். அந்த காலத்தில் எந்த நோய் வந்தாலும் பேய் அடித்துவிட்டது அதனால் செத்துவிட்டான் என்று சொல்லுவார்கள். அந்த காலத்தில் மக்களின் அறிவு அவவளவு மட்டுமே.

இன்றைய காலத்தில் ஒரு கட்டி வந்தாலே பொதுவாக அது புற்றுநோய் தான் என்று மருத்துவம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஒவ்வொரு கட்டிக்கும் ஒவ்வொரு பெயரைவைத்து இந்த நோய் என்று பார்க்ககூடும்.

உங்களிடம் ஒன்றை திருப்பிகேட்கிறேன். புற்றுநோய் அந்தகாலத்தில் இல்லை என்றே நான் ஒத்துக்கொள்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது கம்யூட்டர் துறையை ராகுவின காரத்துவம் என்று சொல்லுகிறார்கள். நான் கேட்கிறேன். சோதிடம் கண்டுபிடித்த நேரத்தில் எந்த கம்யூட்டரை வைத்து கிரகத்தை பார்த்தான் நண்பரே. சோதிடம் கண்டுபிடித்த நேரத்தில் கம்யூட்டரை கண்டுபிடித்துவிட்டான் என்று நினைக்கிறேன்.

அப்புறம் பயமுறுத்துகிறேன் என்று சொல்லுகிறீர்கள். மக்களை எச்சரிப்பது பயமுறுத்துவதாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். உலகம் அழியபோகிறது என்று சொல்லிக்கொண்டு திரியும் கூட்டமே மக்களை ஒன்றும் செய்யமுடியவில்லை நான் பயமுறுத்தி நடந்துவிடவா போகின்றது.

ராகுவைப்பற்றி என்னவோ எல்லாம் சொல்லிருக்கிறீர்கள். அனைத்து தகவலும் உங்களின் அனுபவத்தில் இருந்து வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆமாம் ராகுக்கு அஷ்டவர்க்கத்தை எல்லாம் நீங்கள் சொல்லும்பொழுது கண்டிப்பாக நீங்கள் ஒரு புதிய சோதிட புருஷனாக தான் எனக்கு தெரிகிறீர்கள். ஒரு பதிவை ஆரம்பித்து அதனைப்பற்றி நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

dreamwave said...

chennai to banalore visit

rajeshsubbu said...

வணக்கம் நீங்கள் சொல்லுவது எனக்கு புரியவில்லை