Followers

Thursday, December 5, 2013

குரு தசா பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    குரு தசாவைப்பற்றி பார்த்துவருகிறோம். குரு தசா நடைபெறும் ஜாதகர்கள் கண்டிப்பாக பரிகாரத்தை செய்துவிடுவது நல்லது. குரு தசா நல்லது நடந்தாலும் சரி தீயது நடந்தாலும் சரி பரிகாரத்தை செய்துக்கொள்ளுங்கள். ஒரு சில எளிய வழியை சொல்லுகிறேன்.

வியாழக்கிழமை தோறும் தெஷ்ணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலையை சாத்தி வழிபடுங்கள். குறைந்தது ஒன்பது வாரமாவது செய்யுங்கள். 

ஆலங்குடி குருஸ்தலத்திற்க்கு சென்று வாருங்கள். மொத்த காலத்தில் என்றாவது ஒரு நாள் சென்றாலும் போதும்.

உங்களுக்கு குருவாக இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.

சாய்பாபாவின் கோவிலுக்கு வியாழக்கிழமை தோறும் சென்று வருவது நல்லது.

உணவில் முடிந்தவரை சைவஉணவை எடுத்துக்கொள்வது நல்லது. தயிர் சாதம் அதிகமாக எடுத்துக்கொள்வதும் நல்லது.

குருவிற்க்கு கொண்டைக்கடலை விரும்பபட்டு தானியம் என்பதால் வியாழக்கிழமை அன்று கொண்டைக்கடலையை உணவில் எடுத்தக்கொள்ளலாம்.

வியாழக்கிழமை அன்று குபேரன் கோவில் சென்று வணங்குவது உங்களின் செல்வவளம் உயரும்.

உங்களின் ஊரில் ஏழைபள்ளி குழந்தைகள் இருந்தால் அவர்களின் படிப்புக்கு நீங்கள் உதவலாம். உங்களால் முடிந்தால் பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

ஊரில் நடைபெறும் கோவில் விழாக்களில் பங்குபெறலாம்.

நவகிரகத்தில் உள்ள குரு கிரகத்திற்க்கு உங்களால் முடிந்தால் ஒரு வியாழக்கிழமை அபிஷேகம் செய்யலாம்.

மேலே சொன்ன விசயத்தில் ஏதோ ஒன்றை பின்பற்றி வரலாம். நீங்கள் செய்யும்பொழுது மனதில் நம்பிக்கையோடு செய்வது முக்கியமான ஒன்று.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: