வணக்கம் நண்பர்களே!
bhoopauthy bhoo said...
வணக்கம் ஜயா,
ஓரு ஆண் ஜாதகத்தில் புர்வ புண்ணியத்தில் செவ்வாய் சனி இனைந்துயிருந்தால் ஆன்மிகத்தில் வெற்றி கிடைக்குமா,
வணக்கம் தங்களின் கேள்விக்கு நன்றிஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் சனி இரு கிரகங்களும் இணைந்திருந்தால் ஆன்மீகத்த்தில வெற்றி கிடைக்குமா என்பதை அவரின் சுயஜாதகத்தை வைத்து முடிவு செய்யவேண்டும். முழு ஜாதகத்தை நாம் பார்க்கும்பொழுது அதன் உண்மை தன்மை என்ன என்று தெரியவரும்.
சனியும் செவ்வாயும் இணைந்திருந்தால் உடனே சம்பந்தப்பட்டவர்க்கு கெடுதல் நடக்கப்போகிறது என்று உடனே சொல்லிவிடமுடியாது. சனியும் செவ்வாயும் சேர்ந்து இருக்கிறது அதனால் ராஜபக்சே பலபேரை கொன்றார் என்று கூட ஒரு சிலர் சொல்லுவார்கள். பல லட்சம் பேரை அவர் கொன்றாலும் அவர் அரசனைப்போல் தானே வாழ்கிறார். இது ஒரு எடுத்துக்காட்டுக்காக சொன்னேன். அவரின் ஜாதகத்தை நான் பார்த்து கிடையாது. எங்கையோ நான் படித்த ஞாபகம் மட்டுமே.
பூர்வ புண்ணியத்தில் இரண்டு தீயகிரங்களும் அமரும்பொழுது அவர்களுக்கு கோபம் அதிகமாக வரும். வில்லங்க பார்ட்டி என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது போல் இருப்பார்கள். அவர்கள் செய்யும் செயல் அடுத்தவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவது போல் அமையும்.
பூர்வபுண்ணியத்தில் சனி செவ்வாய் இருந்தவர்கள் கூட ஆன்மீகத்தில் நல்ல நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். அவர்களின் பிறகிரகங்களின் வலிமையோடு நடந்திருக்கும். என்ன கொஞ்சம் கஷ்டப்பட்டு முன்னேறவேண்டும். அனைத்தையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கமுடியாது. ஜாதகத்தில் ஏகாப்பட்ட விசயங்கள் இருக்கும் அதனை முழுவதும் பார்க்கும்பொழுது மட்டும் உண்மை என்ன என்று தெரியவரும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம் ஐயா,
தங்களின் பதிவுக்கு நன்றி,
Post a Comment