வணக்கம் நண்பர்களே!
ஸ்ரவாணி
அயல்நாட்டவர்க்கும் கர்மா . கிரகபாதிப்புகள் எல்லாம் உண்டா ?
அயல் நாட்டிற்கு சென்று விட்டால் தீய/நல்ல பலன்கள் எல்லாம்
ஒருவருக்கு மாறி விடுமா ? அது ஒரு பரிகாரமா ?
வணக்கம் தங்களின் கேள்விக்கு நன்றி. உலகத்தில் பிறந்த எந்த ஒரு உயிர்க்கும் கர்மா என்பது உண்டு. முன்ஜென்ம கர்மா படி ஒவ்வொரு உயிரும் பிறப்பு எடுக்கின்றது.அயல்நாட்டில் மனிதன் பிறந்தாலும் அவனுக்கும் இன்பம் மற்றும் துன்பங்கள் மனிதனின் குறைபாடுகள் எல்லாம் நம்மைபோல் அவர்களுக்கும் இருக்கின்றது. ஒவ்வொரு உயிர்க்கும் முன்ஜென்ம கர்மா என்பது உண்டு. அதற்க்கு தகுந்தார்போல் பிறப்பு எடுக்கின்றது உயிர்கள்.
பரிகாரத்தைப்பற்றி கேள்வி எழுப்பியுள்ளீர்கள். ஒரு சில ஜாதகர்களுக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தால் பாதிப்புகள் குறைந்து தான் காணப்படுகிறது. ஏழரைச்சனி காலத்தின் பொழுது ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு நடக்கும்பொழுது அனைவரும் ஒன்றாக எங்கும் செல்லவேண்டாம் என்று சோதிடர்கள் எச்சரிக்கை செய்வார்கள் காரணம் ஏழரைச்சனி காலத்தில் ஒன்றாக செல்லும்பொழுது மற்றும் வசிக்கும்பொழுது பிரச்சினை பெரிய அளவில் வரும்.
ஒரு சிலருக்கு பூர்வபுண்ணியம் கெடும்பொழுது அவர்களை ஊரில் வசிக்காமல் வெளியூர் சென்று வசியுங்கள் என்று சொல்லுவதும் உண்டு. அப்படி அவர்கள் வெளியில் சென்று வசிக்கும்பொழுது அவர்கள் நன்றாக வாழ்வார்கள்.
குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழும்பொழுது ஒரு சில கிரகங்களின் தாக்கம் குறைக்கின்றது. இது அனுபவத்தில் நான் பார்த்தது சோதிடத்தில் சொல்லியுள்ளார்களாக என்பது தெரியவில்லை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
உங்கள் அனுபவத்தைக் கொண்டு என் கேள்விக்குப்
பதில் கூறியமைக்கு மிக்க நன்றி.
Post a Comment