வணக்கம் நண்பர்களே!
என்னிடம் தொடர்புக்கொண்டு பல நண்பர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிதலைப்பற்றி கேட்டார்கள். எப்படி மாலை அணியவேண்டும் என்று கேட்டனர். அவர்களிடம் நான் சொன்னேன் நான் இதுவரை மாலை அணிந்ததே இல்லை என்று சொல்லிருந்தேன். பின்பு எப்படி நமக்கு அதனைப்பற்றி தெரியும். நான் அதிகமாக கோவிலுக்கும் சென்றது கிடையாது.
பல பேர்களை நான் பார்த்திருக்கிறேன். பயங்கர பக்தியோடு இருக்கின்றனர். அவர்கள் காட்டும் பக்தியை நான் ஒரு சதவீதம்கூட காட்டியதில்லை. அவர்கள் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களை பார்க்கும்பொழுது நான் ஆச்சரிப்படுவது உண்டு. உண்மையில் அப்படி ஒரு பக்தி இருக்கின்றது.
ஐயப்பன் இருக்கும் இடம் கூட எனக்கு தெரியாது. பல நண்பர்கள் இப்பொழுது ஐயப்பனை பற்றி நிறைய மெயில்களை எனக்கு அனுப்புகின்றனர்.அதனை நேரம் கிடைக்கும்பொழுது படிப்பது உண்டு.
ஐயப்பனுக்கு மாலை போடுபவர்கள் சென்னையில் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஒரு சிலர் மாலை போடுவதற்க்கு முன்னால் பல தவறை செய்வது மாலை போட்டவுடன் அமைதியாகிவிடுவது மீண்டும் மாலையை கழட்டியவுடன் அதே தவறை மீண்டும் செய்வது வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
மாலையை அணிந்தவுடன் அவர்கள் நினைப்பு எலலாம் எப்படிடா மாலையை கழட்டுவோம் எனறு நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். மாலையை அணிந்துவிட்டால் நினைப்பு முழுவதும் ஐயப்பன் மேல் தான் இருக்கவேண்டும். எப்படா கழட்டுவது என்று இருக்ககூடாது.
நீங்க்ள இருக்கும் நிலையில் அவனே நினைப்பது மட்டுமே வேலையாக இருக்கவேண்டும். இந்த பிறவியில் இப்படி ஒரு நல்லவாய்ப்பை தந்த அந்த ஐயப்பனுக்கு நன்றி சொல்லவேண்டும் அதனை விட்டுவிட்டு எப்படா கழட்டுவது என்று நினைக்ககூடாது.
நீங்கள் இருக்கும் பக்தி நிலையில் கடவுளின் நாமத்தை சொல்லி நினைத்துக்கொண்டே இருந்தால் நல்லது அப்படி இல்லை என்றால் நீங்கள் மாலை அணிந்தும் அதனால் எந்த பிரயோசனமும் இல்லாமல் போய்விடும். உங்களின் நினைப்பை ஐயப்பன் மேல் திருப்புங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment