Followers

Sunday, December 1, 2013

பூர்வ புண்ணியம் 57


வணக்கம் நண்பர்களே!
                    பூர்வ புண்ணியத்தைபபற்றி நீண்டநாட்களாகிவிட்டது. நமது நண்பர்கள் பூர்வபுண்ணியத்தைப்பற்றி எழுதுங்கள் என்று கேட்கிறார்கள். அவ்வப்பொழுது எழுகிறேன்.

நமது பிறப்பின் ரகசியம் பூர்வபுண்ணியத்தை வைத்து இருக்கின்றது. பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும்பொழுது இது எல்லாம் படிப்பதற்க்கு நேரம் இருக்காது. ஒவ்வொரு நாடுகளாக பறந்து போய்க்கொண்டு இருப்பார்கள். காலையில் இந்தியாவில் இருப்பார்கள். மதியம் சிங்கபூரில் இருப்பார்கள். இப்படியே வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும். பிறப்பின் ரகசியத்தைப்பற்றி எல்லாம் அவர்களுக்கு கவலை இருக்காது.

எப்பொழுது ஒருவருக்கு தோல்வி மேல் தோல்வி அல்லது அடுத்தவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை நமக்கு ஏன் கிடைப்பதில்லை என்று கேட்கும்பொழுது தான் இதனை எல்லாம் படிக்க தோன்றும். ஜாதககதம்பத்தில் அப்படி என்ன தான் இருக்கும் படித்து பார்க்கலாம் என்று தோன்றும்.

ஒருவர்க்கு பூர்வபுண்ணியம் அடிப்படும்பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வி ஏற்படுகிறது. இந்த தோல்வி எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம். கண்டிப்பாக தோல்வி என்பது உண்டு. சோதிடர்கள் இதனை பார்த்து தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தவாறு வரும் நபர்களுக்கு அறிவுரை சொல்லிவிடவேண்டும். பொதுவாக சோதிடர்கள் இதனைப்பற்றி சொல்லுவதில்லை. அடுத்ததாக சோதிடர்கள் சொல்லும் வார்த்தையும் மக்கள் கேட்பதில்லை.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு என்னை தேடி ஒரு அம்மா வந்தார்கள். அந்த அம்மாவின் பெண்ணிற்க்கு ஜாதகத்தை பார்க்கவேண்டும் என்று வந்தார்கள். அதாவது திருமணத்திற்க்காக ஜாதகத்தை பார்க்கவேண்டும் என்று வந்தார்கள். அந்த பெண்ணின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் கடுமையாக கெட்டுருந்தது. நான் அந்த அம்மாவிடம் உங்களின் பெண்ணிற்க்கு மாப்பிள்ளை பத்து வயது வித்தியாசத்தில் பாருங்கள் என்று சொன்னேன். அதற்கு அந்த அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை.

யாரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பத்து வயது எல்லாம் எந்த காலத்தில் இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும். இரண்டு வயது அலலது மூன்று வயதிற்க்கு மேல் வித்தியாசம் இருக்ககூடாது என்பார்கள். சோதிடர்களிடம் ஒரு மிகப்பெரிய திறமை இருக்கும். அது என்ன என்றால் வந்தவர்களின் போக்குக்கு தகுந்த மாதிரி பேசுவான். அவனின் மனதிற்க்குள் தெரியும் எப்படியும் முட்டி மோதி இங்கு தான் வருவாய் என்று நினைத்துக்கொண்டு உங்களின் மனதில் என்ன நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் என்று விட்டுவிடுவது. 

உலகத்தில் உள்ள அனைத்து விலங்கும் வயது வித்தியாசத்தை பார்ப்பதில்லை. மனித விலங்கு மட்டும் தான் இந்த வித்தியாசத்தை பார்த்துக்கொண்டு இருக்கின்றது. உலகத்தில் உள்ள அனைத்து விலங்கும் உடல் உறவை எந்த வயது வித்தியாசமும் இல்லாமல் வைத்துக்கொள்ளும். மனிதன் மட்டும் கணக்கு பார்ப்பான். கேட்டால் மனிதர்கள் மட்டும் தான் அறிவு உள்ளவன். சிந்திக்கும் ஆற்றல் உள்ளவன் என்று சொல்லுவார்கள். 

மனிதனுக்கு மட்டும் என்ன நினைப்பு என்றால் இந்த பூமியில் அதிககாலம் வாழபோகிறோம் என்ற தப்பு கணக்கு போடுகிறான். அதனால் இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கின்றான். சொல்ல வந்த செய்திக்கு வருவோம்.

நான் சொன்னது போல் அந்த பெண்ணின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்தது. பூர்வபுண்ணியத்தால் திருமண தோல்வி அடையுமா என்று கேட்க தோன்றும். நாம் வாழ்க்கின்ற வாழ்க்கை எல்லாம் அங்கு இருந்து தானே வருகின்றது.திருமணம் மட்டும் தனியாகவா வரப்போகின்றது. அதுவும் அங்கிருந்து தான் வரும். பெண்ணை பொருத்தவரை திருமணத்தில் தோல்வி ஏற்பட்டால் முடிந்தது வாழ்க்கை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: