வணக்கம் நண்பர்களே!
என்னை சந்தித்து சோதிடபலனை கேட்க ஒரு நண்பர் என்னிடம் வந்திருந்தார். பலனை பார்த்துவிட்டு பேசும்பொழுது சொன்னார். என்னால் தான் எனது அம்மா இறந்ததா என்று கேட்டார். அவரின் அம்மா இறந்து ஒரு சில மாதங்கள் சென்று இருக்கின்றது.
ஜாதகத்தில் உள்ள ஒரு சில குறைகளால் எனது அம்மா இறந்ததா என்று கேட்டார். இவரின் ஜாதகத்தில் உள்ள பிரச்சினையால் அம்மா இறந்துவிட்டது என்று மனவருத்தத்தில் இருக்கின்றார். இவரின் அம்மா இறந்ததற்க்கு இவருக்கும் எந்த சம்பந்தம் இருக்கின்றது. என்னால் தான் என்ற ஒரு குற்ற உணர்வு அவரின் மனதிற்க்குள் பெரிய பிரச்சினையை கிளப்பி இருக்கின்றது.
ஒவ்வொருவரும் இறப்பது என்பது தவிர்க்கமுடியாதது. அவரின் அம்மாவின் கணக்கு என்று முடியும் என்று எப்பொழுதே தீர்மானிக்கப்பட்டதுவிட்டது மனிதன் என்று பிறந்தானோ அன்றே ஒரு அடியை எடுத்து மரணத்தை நோக்கி வைத்துவிட்டான் என்று தான் அர்த்தம்.
பல சோதிடர்கள் இவரைப்போட்டு குழப்பிவிட்டு இருக்கின்றனர். உன்னால் தான் உங்களின் அம்மா இறந்தது என்று சொல்லியுள்ளார்கள். பையனுக்கு அது மிகப்பெரிய மனகவலையை ஏற்படுத்திவிட்டது. அந்த பையன் என்னிடம் சொல்லும்பொழுது எங்கள் அம்மா இப்பொழுது இறக்காது என்று எண்ணிக்கொண்டு இருந்தேன் அதனால் அவருக்கு நிறைய செய்யவேண்டும் என்று நினைத்து இருந்தேன் ஆனால் செய்யமுடியவில்லை என்றார்.
உங்களின் அம்மா மற்றும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு செய்யவேண்டியதை செய்துவிடவேண்டும். நாட்களை தள்ளிக்கொண்டே செல்லகூடாது. நிச்சயமற்ற வாழ்வில் நாளை என்பது வெறும் கனவு மட்டுமே. இன்றே வாழ்ந்துவிடவேண்டும். அதுவும் சந்தோஷமாக வாழ்ந்துவிடவேண்டும் என்று சொல்லி அனுப்புனேன்.
ஒரு சந்நியாசியாக இருந்தாலும் தந்தைக்கு செய்கிறார்களோ இல்லையோ அவர்களின் அம்மாவிற்க்கு கண்டிப்பாக செய்யவேண்டும்.ஒருவர் சந்நியாசியாக இருந்தாலும் அவரின் காலில் அனைவரும் விழுந்து வணங்குவார்கள். அவரை பெற்ற தாயை அந்த சந்நியாசி கண்டால் அந்த தாயின் காலில் விழுந்து வணங்கவேண்டும்.
உங்களின் வீட்டில் உங்களின் அம்மா இருந்தால் அவர்களை அன்போடு அரவணையுங்கள். வேறு தெய்வவழிபாடு தேவையில்லை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment