வணக்கம் நண்பர்களே!
நான் எந்த ஒரு காரியத்திலும் இறங்கினாலும் அதில் வெற்றி என்பதை நமது அம்மன் பெற்றுக்கொடுத்துவிடும். அம்மன் பெற்றுக்கொடுத்ததை தக்க வைக்கவேண்டியது உங்களின் பொறுப்பாக இருக்கவேண்டும்.
நீங்கள் யார் என்ன என்று தெரியாமல் நான் உங்களுக்கு உதவுகிறேன். உங்களுக்கு உதவும்பொழுது அம்மன் எனக்காக தான் செய்யும். நீங்கள் என்னை ஏமாற்ற நினைத்தால் அம்மன் ஒன்றும் செய்யாது. நான் உங்களைப்பற்றி விசாரிப்பதே இல்லை. அனைத்தையும் அம்மன் பார்த்துக்கொள்ளும் என்று தான் இதனை எல்லாம் செய்கிறேன். நீங்கள் ஏமாற்றினால் உங்களின் விதியை நீங்களே எழுதிக்கொள்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.
அம்மன் உங்களுக்கு உதவுவது ஒரு அற்புதமான வாய்ப்பு. அதனை நீங்கள் பயன்படுத்தி உயரவேண்டும். உங்களுக்கு நான் செய்வதற்க்கு நான் தயாராக உள்ளேன் அம்மனை ஒருமுறை நீங்கள் ஏமாற்றினால் அடுத்தமுறை கண்டிப்பாக உங்களுக்காக வரவே வராது.
வேண்டுதல் வைப்பவர்கள் ஏழைக்களாக இருந்தால் ஒன்றும் பிரச்சினை இல்லை. கையில் காசை வைத்துக்கொண்டு வேண்டுதல் வைத்தால் ஒரு முறை நடக்கும் அடுத்தமுறை நடக்காது. உங்களின் விதியை நீங்கள் தான் அம்மனின் விசயத்தில் எழுதிக்கொள்கிறீர்கள். நான் ஒருபோதும் தலையீடுவதில்லை.
பணத்திற்க்காக இவர்கள் செய்கின்றனர் என்று நினைக்கவேண்டாம். அம்மனின் செயல்பாட்டைப்பற்றி உங்களுக்கு சொல்லிவிட்டேன் என்றால் நீங்கள் உயருவதற்க்கு சரியாக இருக்கும். அந்த காரணத்தால் இதனை பதிவில் சொல்லுகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment