வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். அதில் சொல்லப்பட்ட அனைத்து தகவலும் பொதுவான ஒரு தகவல் அந்த தகவல் அதிகப்பட்சம் உங்களுக்கு நடப்பதற்க்கு வாய்ப்பு இருக்கும். உங்களுக்கு நடக்கும் குரு தசாவோடு ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே சாத்தியப்படும்.
ஒருவருக்கு குரு தசா நடைபெறும் காலத்தில் அவர்களின் உடல் அமைப்பு கொஞ்சம் மிருதுவாக காணப்படும். சிறிய தொப்பை விழும். கைகள் எல்லாம் சிறு குழந்தைக்கு இருப்பது போல் சாப்ட்டாக இருக்கும். ஒவ்வொரு தசாவுக்கும் உடல்நிலையில் மாற்றம் ஏற்படும். அது அந்தந்த தசாவை பொறுத்து அமையும்.
குரு தசாவைப்பொருத்தவரை பிராமணர்களின் உடல்வாகு போல் தான் இருக்கும். உடல்விரைப்பு தன்மைப்போல் இருக்காது. அதிகமாக உடல் ஒளிவிடும் தன்மைபோல் காணப்படும். ஒளி தெரிகின்றது என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல் காணப்படும்.
மகான்கள் படங்களை பார்க்கும்பொழுது ஒளிவீசம் அல்லவா அதுபோல் ஒளிவீசும். உண்மையில் இப்பொழுது மகான்களுக்கு ஒளிவீசுவது போல் செய்வது எல்லாம் போட்டோஷாப் வேலை. அப்படி ஒளிவீசும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஒரு வித தெளிவு உடலில் காணப்படும்.
முடிந்தவரை குரு தசாவில் பொது தகவலைகளை சொல்லிவிட்டேன். இனி ஒவ்வொரு கட்டங்களாக பார்க்கவேண்டியது தான்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
3 comments:
குரு 12ல் ஆட்சியாகி, ராகு3ல் இருந்து குரு தசா ராகு புத்தி நடந்தால் இருவருமே நல்லது செய்ய மாட்டார்களா? நன்றி
வணக்கம் ஜயா,
ஓரு ஆண் ஜாதகத்தில் புர்வ புண்ணியத்தில் செவ்வாய் சனி இனைந்துயிருந்தால் ஆன்மிகத்தில் வெற்றி கிடைக்குமா,
//* Geetha Lakshmi A said...
குரு 12ல் ஆட்சியாகி, ராகு3ல் இருந்து குரு தசா ராகு புத்தி நடந்தால் இருவருமே நல்லது செய்ய மாட்டார்களா? நன்றி *//
வணக்கம் குரு தசா இப்பொழுது தானே ஆரம்பித்து இருக்கிறேன். பொறுமையாக அனைத்தையும் பார்க்கலாம். நன்றி
Post a Comment