Followers

Monday, December 9, 2013

ஆன்மீகத்தின் அடிப்படை


வணக்கம் நண்பர்களே!
                    நீங்கள் கோவிலுக்கும் செல்லவேண்டாம். யாத்திரையும் செல்லவேண்டாம். மந்திரப்பயிற்சியும் செய்யவேண்டாம் ஒன்றை மட்டும் செய்தால் போதும் அது என்ன?

விடியற்காலையில் எழுவது தான் அது. பிரம்மமுகூர்த்தம் என்ற நேரத்தை எதற்க்கு அந்த காலத்தில் வைத்தார்கள் என்றால் இந்த காலத்தில் மட்டும் இறைவன் உங்களை பார்க்க வருகிறார். வேறு எந்த நேரத்திலும் உங்களை பார்க்கவருவதில்லை.இறைவன் உங்களை பார்க்க வரும் நேரத்தில் நீங்கள் தூங்கிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் நீங்கள் ஆன்மீகத்தில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையமுடியுமா என்றால் கண்டிப்பாக முடியாத ஒன்று.

உலகத்திற்க்கே ஒரு பவர் கிடைக்கிறது என்றால் அந்த நேரத்தில் மட்டும் தான் கிடைக்கும். அந்த சக்தி தான் ஒரு நாள் முழுவதும் இருக்கும்.அதனை விட்டுவிட்டு நீங்கள் நாள் முழுவதும் அலைந்தால் எப்படி உங்களுக்கு அனைத்தும் கிடைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை என்றால் உலகம் அன்று இயங்காது என்று நினைக்கிறேன். யாருமே காலை பத்து மணிவரை எழுவது கிடையாது. நேற்று காலை ஏழு மணியளவில் தான் பூஜை செய்தேன். விடியற்காலை எழுந்தாலும் பூஜை நேரங்கள் மாற்றி தான் பூஜை செய்வேன் ஏன் என்றால் அதில் ஒரு சில விசயங்கள் இருப்பதால் அப்படி செய்வது வழக்கம்.

நேற்று என்னோடு வியாபார தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் முக்கிய பிரச்சினையை தீர்க்க ஒன்று செய்யவேண்டும் என்று எண்ணி ஒவ்வொருவராக காலையில் போன் செய்கிறேன் ஒருவரும் போனை எடுக்கவில்லை. 

இன்றைக்கு யாருக்கும் செய்யமுடியாது என்று அம்மன் நினைத்துவிட்டது என்று எண்ணி பூஜையை முடித்துவிட்டு அலுவலகத்திற்க்கு புறப்பட்டால் ஒருவர் பின் ஒருவராக எனக்கு போன் செய்து சார் தூங்கிக்கொண்டிருந்தேன் இப்பொழுது  தான் உங்களின் கால் வந்ததை பார்த்தேன் என்கிறார்கள். 

இவர்கள் எல்லாம் இப்படி இருந்தால் எப்படி வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்? பெரியதொழில் அதிபராக எப்படி மாறுவது?. 

உங்களுக்கு வாழ்க்கையில் எதுவுமே கிடைக்கவில்லை. கிரககோளாறு மோசமாக இருக்கின்றது என்னால் எதுவுமே செய்யமுடியவி்ல்லை என்று நினைப்பவர்கள் கொஞ்ச நாள் விடியற்காலை எழுந்து பாருங்கள். உங்களை தேடி அனைத்தும் வந்துவிடும். எந்த கிரகங்களும் உங்களை ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு ஆன்மீகவாதிக்கு இந்த நேரம் பொன்னான நேரம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Anonymous said...

முயற்சிக்கிறேன் சுப்பு சார் !