Followers

Tuesday, June 21, 2016

பாக்கியாதிபதி நாளில் தர்மம்


ணக்கம்!
          பணம் மட்டும் சம்பாதித்தால் போதும் என்று ஓடிக்கொண்டு இருக்ககூடாது கொஞ்சம் கோவில் பக்கமும் நாம் போகும்பொழுது தான் நமது வாரிசுகள் நன்றாக இருக்கும்.

பாக்கியஸ்தானத்தை வைத்து தான் தந்தையை சொல்லுகிறோம் இன்றைய தலைமுறைக்கு பலருக்கு பாக்கியஸ்தானம் கெடுவதற்க்கு காரணம் அவர்களின் தந்தை கோவில் குளங்களுக்கு செல்லாமல் இருந்த காரணத்தால் தான் பாக்கியஸ்தானம் கெடுகிறது.

இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் விழிப்பாேடு இருக்கின்றனர். அதாவது கோவில் குளங்களுக்கு அடிக்கடி சென்று புண்ணியத்தை தேடுகின்றனர். ஒரு சிலர் மட்டும் கொஞ்சம் மாறாமல் இருக்கின்றனர் அவர்களும் மாறிவிட்டால் எதிர்காலத்தில் தீயகிரகங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

உங்களின் பாக்கியஸ்தானம் எது என்று பாருங்கள். அந்த பாக்கியஸ்தானத்திற்க்கு அதிபதி யார் என்பதை தெரிந்துக்கொண்டு அன்றைய நாளில் தானத்தை அதிகம் செய்யுங்கள் உங்களுக்கு நல்லது அதிகம் நடக்கும்.

பாக்கியஸ்தான அதிபதி கிரகத்தின் நாளில் செய்யவேண்டும். உதாரணத்திற்க்கு உங்களுக்கு லக்கினம் மகரம் என்றால் கன்னி வீடு உங்களின் பாக்கியஸ்தானம். அதன் அதிபதி புதன். புதன் கிழமை அன்று தானம் மற்றும் ஆன்மீக காரியங்கள் அதிகம் செய்யும்பொழுது உங்களின் வாழ்க்கை மற்றும் உங்களின் வாரிசுகளின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு