வணக்கம் நண்பர்களே!
நான் சில விசயங்களை தன் இளமை பருவத்தில் நினைத்திருந்தேன். அது எல்லாம் இப்பொழுது தான் நடந்து வருகிறது. நம் நினைப்பு நன்றாக இருக்கும் பட்சத்தில் அந்த நினைப்பை ஆண்டவன் நிறைவேற்றி வைக்கிறான்.
இளம்வயதிலேயே எனக்கு சுயதொழில் செய்வதற்க்கு மிகவும் விருப்பம். அப்பொழுது இருந்த பொருளாதார நிலைமையில் சுயதொழிலை தொடங்குவதற்க்கு வாய்ப்பில்லை.
ஒருவர் தொழில் செய்தால் அவரிடம் சென்று வேலைக்கு சேராமல் உனக்கு இவ்வளவு நான் வியாபாரம் செய்து தருகிறேன். எனக்கு இவ்வளவு பணம் கொடுத்துவிடு என்று பேசி தனியாகவே போராடுவேன். அதில் ஒருசில விசயத்தில் வெற்றி பெற்று இருந்தேன்.
இப்பொழுது நான் என்ன என்ன தொழில் செய்யவேண்டும் என்று நினைத்தேனோ அத்தனையும் என்னை தேடிவருகின்றது. நமது ஜாதககதம்பத்தில் தொழில் உதவி செய்கிறோம் அல்லவா. அதன் வழியாக பல தொழில்கள் என்னை நாடி வருகின்றன்.
நான் எந்த தொழில் தொடங்கவேண்டும் என்று நினைத்த தொழில்கள் எல்லாம் என்னை தேடிவரும்பொழுது மனதிற்க்கு மிகவும் விருப்பபட்டு அந்த தொழிலுக்கு உதவி செய்கின்றேன்.
தொழிலுக்கு உதவும் செயலில் மட்டும் எனக்கு தோல்வி என்பது இருக்காது. அதிகப்பட்சம் வெற்றி மட்டுமே வரும். ஏன் அப்படி வெற்றி வருகிறது என்றால் தொழில் செய்வதற்க்கு காரணமான சனிக்கிரகத்தை ராசியாக கொண்டதால் அப்படி நடைபெறுகிறது. நல்லதை நினையுங்கள் அது உங்களுக்கு எப்படியாவது வந்து அடைந்துவிடும்.
நான் நினைத்தது அனைத்தும் இன்னும் நடந்துவிடவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக நடந்துக்கொண்டு வருகிறது. அதனை எல்லாம் பார்க்கும்பொழுது நான் நினைத்தது அனைத்தும் இந்த ஜென்மத்திலேயே எனக்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் நல்லதை நினையுங்கள் உங்களுக்கும் அனைத்தும் நடந்துவிடும்.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment