வணக்கம் நண்பர்களே !
ஒரு சிலர் என்னிடம் பேசும்பொழுது இந்த ஜென்மத்தில் நாம் என்ன புண்ணியம் செய்தாலும் நமக்கு கிடைக்கபோவதில்லை அது அடுத்த ஜென்மத்திற்க்கு மட்டுமே கிடைக்கும் என்கிறார்கள் அடுத்த ஜென்மத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. அதனால் நான் எந்த புண்ணியக்காரியங்களும் செய்யாமலே இருக்கலாமா என்று கேட்டார்கள்.
புண்ணியம் செய்கிறேன். அதாவது அடுத்தவர்களுக்கு அல்லது ஏதோ ஒரு நல்லகாரியம் செய்கிறேன் என்று நீங்கள் நினைதது வரும்பொழுது அதற்க்கான பலனை ஒருபோதும் நாம் எதிர்பார்க்ககூடாது. எப்பொழுது அது திரும்பிவரும் என்று எதிர்பார்க்ககூடாது. நமது கடமை நாம் செய்யவேண்டும் அவ்வளவு தான் நமது வேலை.
இப்பொழுது நமக்கு நடக்கும் நன்மை நாம் இந்த பிறவியிலேயே செய்த நன்மையாக கூட இருக்கலாம். முன்ஜென்மத்தில் செய்ய நன்மையால் கூட இருக்கலாம்.அதனால் நீங்கள் செய்கின்ற நன்மையை செய்துக்கொண்டே இருங்கள்.
முன்காலத்தில் சொல்லுவார்கள் நாம் செய்த பாவம் நமது தலைமுறையை பாதிக்கும் என்று சொல்லுவார்கள். இப்பொழுது நாம் செய்யும் பாவம் நம்மை பாதிக்க செய்கிறது. இளம்வயதில் ஒரு தவறை செய்தால் நாம் இறப்பதற்க்குள் அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
அனைத்தும் பூர்வபுண்ணியத்தில் இருந்து நடைபெற்றாலும் இந்த ஜென்மத்தில் நாமும் நல்லதை செய்யவேண்டும். அப்பொழுது முன்ஜென்மத்தில் இருந்து எளிதில் அந்த புண்ணியங்கள் எல்லாம் நமக்கு கிடைத்து ஒரு நல்ல வாழ்க்கை நமக்கு கிடைக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
நெத்தியடி கேள்வி ! நச் பதில்.
அயல்நாட்டவர்க்கும் கர்மா . கிரகபாதிப்புகள் எல்லாம் உண்டா ?
அயல் நாட்டிற்கு சென்று விட்டால் தீய/நல்ல பலன்கள் எல்லாம்
ஒருவருக்கு மாறி விடுமா ? அது ஒரு பரிகாரமா ?
Post a Comment