Followers

Saturday, December 7, 2013

பூர்வ புண்ணியம் 61


வணக்கம் நண்பர்களே!
                    உங்களின் பூர்வபுண்ணியம் கெடும்பொழுது நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லகூடாது என்று பழைய பதிவில் சொல்லிருந்தேன். ஒரு நண்பர் அதனைப் படித்துவிட்டு என்னிடம் கேட்டார். 

உங்களால் குலதெய்வகோவிலுக்கு போகமுடியாது என்று சொன்னதன் அர்த்தம். நீங்கள் குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்பொழுது ஏதாவது விபத்து அல்லது போகமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கலாம். அதனால் அப்படி சொல்லிருந்தேன்.

உங்களால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் தாராளமாக செல்லலாம்.ஒவ்வொரு மனிதனும் குலதெய்வத்தை வைத்துக்கொண்டு தானே முன்னேறமுடியும். எப்படி கெட்டாலும் குலதெய்வம் எப்படியாவது உங்களுக்கு உதவ முன்வரும்.

உங்களால் குலதெய்வ கோவிலுக்கு போகமுடியவில்லை எனும்பொழுது அந்த கோவிலுக்கு சென்று வரகூடியவர்கள் உங்களின் சொந்தத்திலேயே இருக்கலாம். அவர்களை அழைத்துக்கொண்டு செல்வது நல்லது. அவர்கள் வழியே மூன்று தடவைக்கு மேல் உங்களின் கோவிலுக்கு செல்லும்பொழுது அதன் பிறகு நீங்களே தனியாக செல்லமுடியும்.

குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்பொழுது ஆடம்பரம் இல்லாமல் செல்லவேண்டும். ஆடம்பரத்தோடு செல்லும்பொழுது அங்கு உங்களுக்கு அடிவிழும். பூர்வபுண்ணியம் பாதிககப்பட்டாலும் குலதெய்வ கோவிலுக்கு செல்லலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: