வணக்கம் நண்பர்களே!
பொதுவாக தமிழகத்தில் எந்த ஒரு குலதெய்வம் இருந்தாலும் அங்கு பேச்சியம்மன் என்ற பெரியாச்சி அம்மன் இல்லாமல் குலதெய்வம் இருக்காது. ஒவ்வொரு குலதெய்வத்திலும் பல பேர்களோடு அவர்களின் வம்சபேரோடு இந்த பேச்சியம்மன் இருக்கும்.
இந்த அம்மன் வீட்டில் இருக்கும் கர்ப்பவதிகளுக்கு மிகமுக்கியமான ஒரு தெய்வமாகவே இருக்கின்றது. அவர்களை பாதுகாக்கும் வேலையை பேச்சியம்மன் தான் செய்யும். பேச்சியம்மனை வயதான மூதாட்டிபோல் சில இடங்களில் வைத்திருப்பார்கள். பேச்சி ஆத்தா என்று அழைப்பார்கள். அந்த காலத்தில் மகப்பேறு என்பது எல்லாம் வயதான பெண்மணிகள் தானே பார்த்தார்கள் அதனால் கூட இதனை அப்படி வைத்திருக்கலாம்.
நீங்கள் கிராமகோவில்களுக்கு சென்று பார்த்தால் கண்டிப்பாக அங்கு பேச்சியம்மன் வழிபாடு இல்லாமல் இருக்காது. பொதுவாக இதற்கு அசைவம் வைத்து தான் படைப்பார்கள். அதிலும் களி, கருவாட்டுக்குழம்பு. முருங்கை கீரை போன்றவற்றை வைத்து படைப்பார்கள்.
பேச்சியம்மன் வழிபாடு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றது என்றே நினைக்கின்றேன். மனிதன் நாகரீகத்தை நோக்கி வந்துவிட்டான். அப்பொழுது குழந்தை இல்லை என்றால் பேச்சியம்மனை வணங்கி வருவார்கள் குழந்தை பிறக்கும். இந்த காலத்தில் அனைவரும் வேறு வழிப்பாட்டை தொடங்கிவிட்டனர். குழந்தை பிறக்கமாட்டேன்க்கிறது.
இந்த காலத்தில் நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் குழந்தைகளை ஊசி மருந்தில் தான் பிறக்கின்றது. ஒன்றும் இயற்கையாகவே உருவாகவே இல்லை. திருமணம் முடிந்த கையோடு மருத்துமனையில் தான் குடியாகவே இருக்கின்றனர். எப்படி இயற்கையாக பிறக்கும்.
இந்தியாவில் இன்னும் கொஞ்சம் காலத்தில் விளையாட்டுதுறையே இல்லாமல் போய்விடும். யாருக்கு தெம்பு இருக்கின்றது விளையாடுவதற்க்கு அவன் அவன் இடரி கீழே விழுவது போல் இருக்கின்றான். இவன் எங்கு போய் விளையாடுவது.
ஒரு வழக்கத்தையும் எளிதில் மாற்றக்கூடாது.குலதெய்வத்தை மறந்துவிட்ட ஆட்களைபோய் குலதெய்வம் கோவிலில் இருக்கும் பேச்சியம்மனை வணங்கசொன்னால் எப்படி தெரியும்.குலதெய்வம் இருக்கும் ஆட்கள் பேச்சியம்மனையும் சேர்த்து வணங்கிவாருங்கள். உங்கள் குலம் தழைக்கும்.
முதலில் குழந்தை பிறந்தவுடன் குலதெய்வ கோவிலில் முடிக்காணிக்கை எல்லாம் செய்வது பேச்சியம்மனுக்காக மட்டுமே தான். ஊரு ஊராக குழந்தை வேண்டி அலைவதை விட குலதெய்வத்தில் இருக்கும் பேச்சியம்மனை வேண்டினால் நல்லது. நான் சொல்லும் குலதெய்வம் வழிபாடு மற்றும் குலதெய்வத்தை வீட்டில் வைத்து பச்சை பரப்புதல் வழிபாடு எல்லாம் பல கோடி விசயங்கள் அதன் உள்ளே இருக்கின்றது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment