வணக்கம் நண்பர்களே!
உங்களுக்கு குரு தசா நடைபெற்று வந்தால் மஞ்சள் கலர் மேல் உங்களுக்கு விருப்பம் செல்லும். மனதிற்க்கு புதுதெம்மையும் மூளை வளர்ச்சிக்கு உதவுவதும் மஞ்சள் கலர். திருமணத்திற்கு குரு தான் காரகம் வகிக்கிறார் என்று சொல்லுவதும் தாலி கயிற்றை மஞ்சள் கயிராக பயன்படுத்துவம் குரு காரகம் வகிக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது.
உங்களுக்கு குரு தசா நடந்தால் மஞ்சள் கலரை பயன்படுத்துங்கள். உங்களின் மனதே அதை தான் தேடும். நிறைய கலர்கள் உள்ள ஆடைகள் இருந்தாலும் உங்களின் கை மஞ்சள் கலர் மேல் தான் போகும். திருமணத்திற்க்கும் மற்றும் எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கும் மஞ்சளை பத்திரிக்கையின் ஒரத்தில் தடவிவைப்பார்கள். ஏன் என்றால் மஞ்சள் சுபநிகழ்ச்சிக்காக உள்ளது என்ற ஐதீகத்தால் மட்டுமே அப்படி செய்வார்கள்.
குரு தசா நடைபெறும் காலத்தில் பார்த்தால் ஒருவரின் இறந்தவர்களின் வீட்டிற்க்கு செல்லமாட்டார்கள். அப்படியே சென்றாலும் இறந்த நாள்களில் செல்லாமல் அடுத்த நாளில் செல்வார்கள். இறந்த வீடு என்பது எல்லாம் பிடிக்காமல் போகும். எங்கு சுபநிகழ்ச்சிகள் நடக்கின்றதோ அங்கு முதல் ஆளாக இருப்பார்கள்.
பெண்களாக இருந்து உங்களுக்கு குரு தசா நடைபெற்றால் அதிகமாக மஞ்சள் தேய்த்து குளிக்கலாம். இந்த காலத்தில் மஞ்சள் தேய்த்து குளிப்பது எல்லாம் போய்விட்டது என்று நினைக்கிறேன். இந்த முறையை பின்பற்றி பாருங்கள். நல்ல ரிசல்ட் தெரியும்.
உங்களுக்கு குரு தசா நடைபெறும் காலத்தில் மஞ்சள் கலரில் ஏதாவது ஒரு பொருளையாவது வைத்துக்கொள்வது நல்லது.குரு தசா உங்களுக்கு நனமையை செய்யும்.
உங்களுக்கு குரு தசா நடைபெறும் காலத்தில் மஞ்சள் கலரில் ஏதாவது ஒரு பொருளையாவது வைத்துக்கொள்வது நல்லது.குரு தசா உங்களுக்கு நனமையை செய்யும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
ஐயா,சனி திசையில் குரு புத்தி நடந்தாலும் இப்படி பலன் இருக்குமா?
Post a Comment