Followers

Sunday, December 1, 2013

சோதிட பலன் சொல்லும்பொழுது


வணக்கம் நண்பர்களே!
                     சோதிடம் பார்க்கும்பொழுது பலனை சொல்லும்பொழுது ஒரு சில காலங்களில் மரணம் கூட ஏற்படும் நிலையை கண்டறியமுடியும். நாம் அதனை அவர்களுக்கு நேரிடையாக பலனை சொல்லாமல் சூசகமாக பலனை சொல்லிவிடலாம். இப்படி சொல்லுவது ஒரு வகையில் நல்லது.

பல பேர் சோதிட பலனை சொல்லும்பொழுது நல்லதை மட்டும் சொல்லிக்கொண்டே செல்வார்கள். இதனை அப்படி சொல்லுகிறார்கள் என்றால் அப்பொழுது தான் சோதிடம் பார்க்க வந்தவர்கள் பணம் கொடுப்பார்கள் என்று சொல்லுவார்கள். உங்களுக்கு பணம் கொடுக்கிறார்களோ இல்லையோ நீங்கள் சொல்லவேண்டிய பலனை சரியாக சொல்லிவிடுங்கள்.

ஜாதகத்தில் என்ன இருக்கின்றதோ அதனை அப்படியே சொல்லிவிடுவது நல்லது. என்ன சுத்தி வளைத்து கொஞ்சம் சொல்லவேண்டும்.பரிகாரம் வேலை செய்யதாலும் வேலை செய்யாவிட்டாலும் இதனை செய்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது நல்லது. அவர்கள் செய்யும் வழிபாடு அவர்களின் மனதில் புது தெம்பையாவது கொடுக்கும்.

நாம் சொல்லும் சோதிடபலன் பலபேர்களின் வாழ்க்கையை தலைவிதியே மாற்றும். ஒருத்தருக்கு வேலை விசயமாக வெளிநாடு செல்லவாய்ப்பு வரும் அந்த நேரத்தில் நீங்கள் வெளிநாடு செல்லமுடியாது என்று சொல்லிவிட்டால் அது விதியே மாற்றிவிடும். 

பொதுவாக சோதிடம் சொல்லும்பொழுது அனைத்தையும் நன்றாக கணித்துவிட்டு பலனை சொல்லுங்கள். பலன் சொல்லுவதற்க்கு முன்பு உங்களின் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தை வேண்டிக்கொண்டு சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

antonyarun said...

Dear sir
I have a one doubt?
How to calculate twins gadagam because everything is same. Rasi and lagnam .
Thanks
Antony