வணக்கம் நண்பர்களே!
குரு தசாவைப்பற்றி பொதுதகவலாக பார்த்துவருகிறோம். இந்தபதிவிலும் பொதுதகவலை தருகிறேன் படித்து பாருங்கள்.
ஒருவருக்கு குரு தசா நடைபெற்றால் அவர் சுத்தமாக மாறிவிடுவார். தன்னை சுத்தமாக வைததுக்கொள்வார். ஒரு சிலருக்கு சனி தசா நடைபெறும் காலத்தில் குளிக்கமாட்டார்கள். குரு தசா நடந்தால் சுத்தமாக இருப்பார்கள்.
விடியற்காலையில் எழும் விசயத்தைப்பற்றி ஏற்கனவே சொல்லிருந்தேன் அல்லவா. ஒருவர் விடியற்காலையில் எழுவது என்பது எல்லாம் அதுவும் இந்த காலத்தில் வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம் ஆனால் குரு தசா நடைபெறும் காலத்தில் விடியற்காலையில் எழுந்து குளித்துவிடுவார்கள்.
சுத்தமான ஆடைகளை விரும்பி அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி தருவார். ஒரு ஆண்மகனுக்கு குரு தசா நடைபெறும் காலத்தில் ஐந்தாயிரத்திற்க்கு மேல் சட்டை வகைகளை விரும்வார்கள். அதனையே போடவைப்பார் குரு.
பயணங்கள் செல்லும்பொழுது கூட உயர்வகுப்பில் செல்லவேண்டும் என்று நினைப்பார்கள்.சாதாரண கட்டணத்தில் செல்லமாட்டார்கள் உயர்வகுப்பில் அதிக பணம்கொடுத்து பயணம் செய்யும் வசதியான பிரிவில் செல்லவைக்கும்.
தங்கம் அல்லது தங்ககலரில் ஏதாவது ஒரு நகை அல்லது கைகடிக்காரமாவது அணியவைப்பார் குரு. ஒரு அந்தஸ்து உருவாக்க வேண்டும் என்று குரு நினைப்பார்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment