Followers

Friday, December 6, 2013

ஆன்மீக அனுபவங்கள் 138


வணக்கம் நண்பர்களே!
                    நான் பேசும் விசயங்கள் பல நேரங்களில் நாத்திகம் மாதிரி தான் இருக்கும். இதனாலேயே பல சாமியார்கள் என்னிடம் வம்பு செய்வார்கள். நான் அவர்களிடம் சொல்லுவேன் இன்னுள் இருந்து இந்த கேள்வியை இறைவன் தான் எழுப்புகிறான் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று கேட்பேன்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் ஒரு சாமியாரிடம் ஒரு கேள்வி கேட்டேன். அவர் ஒரு சந்நியாசி. அவரிடம் சாமி இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லுகிறீர்கள். பெண்களிடம் இருக்கமாட்டாரா சாமி என்று கேட்டேன்.

ஏன் இருக்கமாட்டார் இருப்பார் என்று சொன்னார். அப்ப நீங்கள் ஏன் அவர்களை தள்ளிவைக்கிறீர்கள் என்றேன். அவர்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியதானே என்று கேட்டேன். நீங்கள் ஏன் அவர்களை திருமணம் செய்யகூடாது. அவர்களை திருமணம் செய்துக்கொண்டு வாழவேண்டியதானே. ஆண்களை போல் பெண்களும் மனிதர்கள் தான்.

பெண்களை திருமணம் செய்வதால் உங்களுக்கு என்ன நடக்கபோகின்றது. திருமணம் செய்துக்கொண்டு ஆன்மீகத்தில் உச்சநிலையில் இருப்பவர்கள் பல பேர் இருக்கும்பொழுது பெண்களை வேண்டாம் என்று ஒதுக்குவது எந்த வகையில் நியாயம் என்று கேட்டேன்.

அவர் சொன்னார் திருமணம் செய்வதால் பிரச்சினை என்ன என்றால் அதன் வழியில் கர்மா வந்துவிடும் என்றார்.

அதற்கு நான் வந்தால் பரவாயில்லை அதற்கு தான் கிருஷ்ணர் சொல்லியுள்ளாரே நீ இறக்கும்பொழுது எனது நாமத்தை சொல்லு நீ என்னிடம் வந்துவிடுவாய் என்று சொல்லியுள்ளாரே அதுபோல் சொல்லிவிடவேண்டியதானே என்று சொன்னேன்.

அவர் உனக்கு பதில் சொல்லமுடியாது நீ எதையாவது கேட்டுக்கொண்டே இருப்பாய் என்று கிளம்பிவிட்டார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: