Followers

Friday, December 6, 2013

குரு தசா பலன்கள் பகுதி 14


வணக்கம் நண்பர்களே!
                    குரு கிரகம் லக்கினத்திற்க்கு மூன்றாவது வீட்டில் இருந்து தசா நடத்தினால் எப்படிபட்ட பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

குரு கிரகம் நன்றாக இருக்கும் நிலையில் நடைபெறும் தசா பலன்கள்.

மூன்றாவது வீடு என்பது நமது இளைய சகோதர சகோதரிகளை காட்டும் இடம் என்பதால் அவர்களின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். ஒரு சில வீட்டில் அண்ணன் ஒன்று செய்யாமல் வீட்டில் இருப்பார். அவர் தம்பி சம்பாதித்துக்கொண்டு இருப்பார் அவரின் வருமானத்தில் இவர் வாழ்ந்துக்கொண்டு இருப்பார். அந்த மாதிரியான பலன்கள் எல்லாம் தரும்.

அடிக்கடி செல்லும் குறுகிய பயணத்தை காட்டும் இடம் என்பதால் அடிக்கடி பயணங்கள் சென்றுக்கொண்டு இருப்பீர்கள். இசையை ரசிக்கும் இடம் என்பதால் நல்ல தெய்வீக இசைகளை கேட்டு மகிழ்வீர்கள்.

பக்கத்து வீட்டுக்காரர்களை காட்டும் இடம் என்பதால் அவர்களுடன் அன்போடு இருப்பீர்கள். அவர்களும் அன்போடு இருப்பார்கள். இப்பொழுது எல்லாம் பக்கத்துவீட்டுக்காரர்களிடம் சண்டை போட்டுக்கொண்டு இருப்பது பலருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. இந்த தசாவில் அன்பு இருக்கும். சண்டை வராது.

மூன்றாவது வீட்டில் இருந்து குரு கிரகம் ஏழாவது வீட்டை பார்ப்பதால் துணைவர் வழியில் நன்மை கூடுதலாக நடைபெறும். அவரின் முழு ஒத்துழைப்பும் உங்களின் வாழ்க்கைக்கு கிடைக்கும்.

உங்களோடு கூட்டுத்தொழிலை நடத்தும் நபரை காட்டும் இடம் என்பதால் நீங்கள் கூட்டுத்தொழில் நடத்திக்கொண்டிருந்தால் அவர் வழியாக நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

குரு தன் ஏழாவது பார்வையில் ஒன்பதாவது வீட்டை பார்ப்பதால் அனைத்து பாக்கியமும் கிடைக்கும்.நல்ல பெயரோடு வாழ்வீர்கள். ஊரில் உங்களுக்கு என்று ஒரு செல்வாக்கை ஏற்படுத்திக்கொடுப்பார்.

குரு ஒன்பதாவது பார்வையாக லாபஸ்தானத்தை பார்ப்பதால் நல்ல வருமானம் உங்களுக்கு கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகளை காட்டும் இடம் என்பதால் அவர்கள் நன்றாக இருப்பார்கள். அவர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும்.நண்பர்களின் வழியிலும் நன்மை இருக்கும்.

குரு கிரகம் கெடுதல் தரும் நிலையில் இருந்தால் மேலே சொன்ன பலன்களுக்கு எதிராக பலன்கள் நடைபெறும். நீங்களே அதனை பார்த்துக்க்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: