Followers

Sunday, December 8, 2013

செயல் எப்படி வெற்றிபெறும்


வணக்கம் நண்பர்களே!
                    அவர் அவர்கள் வேண்டுதல் வைத்து நடக்காத பொழுது அடுத்தவர்களுக்கு ஒரு மனிதன் செய்யும்பொழுது நடப்பது எப்படி என்று ஒரு நாள் நீங்கள் யோசித்து இருப்பீர்களா?

நான் ஒருவருக்கு ஒரு காரியம் நடக்கவேண்டி ஒரு பூஜை செய்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு உடனே நடந்துவிடும். நான் போதுமான வரை செய்துக்கொடுப்பது எல்லாம் காலஅவகாசம் வைத்து தான் செய்து தருவேன். இத்தனை நாளில் இது நடக்கும் என்று சொல்லிவிட்டு செய்துக்கொடுக்கிறேன்.

நீங்கள் என்ன வழிபாடு செய்கின்றீர்களோ அதனை அப்படியே செய்கின்றேன். என்ன ஒன்று என்றால் மனதை முழுமையாக அதில் செலுததுகிறேன். ஒரு மனது சிதறாமல் அதனோடு ஈடுபட்டு செய்யும்பொழுது காரியம் வெற்றி நடைபெறுகிறது.

நீங்கள் செய்யும்பொழுது உங்களுக்கே சந்தேகம் வந்துவிடும். இது நடக்கின்றதோ நடக்கவில்லையோ என்று சந்தேகம் வரும்.அதன் பிறகு நீங்கள் மனதை எப்படி செய்யும் செயலில் வைப்பீர்கள். மனதை முழுமையாக அதில் செலுத்தவேண்டும்.

கடவுளிடம் ஒரு சந்தேகமும் நான் வைப்பதில்லை. இந்த வேலை நடக்கும் என்று நினைத்துக்கொண்டு காரியத்தில் இறங்குவேன். கண்டிப்பாக அது நடந்துவிடும். நீங்களும் ஒரு சந்தேகமும் படாமல் மனதை முழுமையாக அதில் ஈடுபடுத்துங்கள் கண்டிப்பாக உங்களுக்கும் வெற்றி கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

antonyarun said...

Nice topic sir
Thanks

rajeshsubbu said...

வணக்கம் தங்களி்ன் வருகைக்கு நன்றி