வணக்கம் நண்பர்களே !
செல்வம் சேருவதற்க்கு என்று தைலக்குளியலைப்பற்றி ஒரு பதிவில் சொல்லிருந்தேன். அது என்ன தைலம் என்று பல நண்பர்கள் கேட்டனர். அது எங்கு கிடைக்கும் என்கிறார்கள்.
நமது முன்னோர்கள் நமக்கு பல வழிகளையும் சொல்லியுள்ளனர். அதனை எல்லாம் நீங்கள் படிக்காமல் இருந்ததால் இதனைப்பற்றி எல்லாம் சொல்லிதரவேண்டியுள்ளது. ஆயுர்வேதத்தில் நிறைய விசயங்கள் இதனைப்பற்றி இருக்கின்றது. நமது பதிவில் இதனைப்பற்றி எல்லாம் சொன்னால் அது ஒரு தனிதொடராக சென்றுக்கொண்டிருக்கும்.
நாட்டுமருந்துக்கடையில் சென்று கேட்டால் உடலில் தேய்த்து குளிப்பதற்க்கு என்று பல வகையான மூலிகை எண்ணெய் எல்லாம் வைத்திருப்பார்கள். அதனை வாங்கி வந்து உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்.
எண்ணெய் வாங்கிவந்தும் உபயோகப்படுத்தலாம் அல்லது உங்களுக்கே தெரிந்து இருந்தால் நீங்களே தயார் செய்துக்கொள்ளலாம். பல பேர்க்கு தைலம் தயாரிப்பது எல்லாம் எளிதில் தெரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழர்கள் எல்லாம் சித்தர்களின் பரம்பரை என்று எங்கோ படித்திருக்கிறேன்.
நான் இருக்கும் அலுவலகத்திற்க்கு அருகில் ஒரு நாட்டுமருந்துகடை உள்ளது. அங்கு நடக்கும் வியாபாரம் மாதிரி அடையாரில் வேறு எந்த கடையிலும் நடைபெறாது. உலகத்தில் உள்ள அத்தனை குச்சிகளையும் இலை சருகையும் கொண்டுவந்து வைத்துக்கொண்டு வியாபாரம் செய்கின்றனர். மக்கள் கூட்டம் அங்கு தான் அதிகமாக இருக்கும்.
பொதுவாக சருமத்திற்க்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும்பொழுது சருமம் எப்பொழுதும் இளமையாகவே இருக்கும். வயது ஏறுவது கூட தெரியாது. இளமை தோற்றத்தை அப்படியே தரும்.மனசும் புத்துணர்வோடு இருக்கும்பொழுது உங்களால் அனைத்தையும் எளிதில் செய்யமுடியும். வரும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் இதனை செய்து பாருங்கள்.
தைலத்தைப்பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள். நான் தைலம் வியாபாரம் எல்லாம் செய்யவில்லை. ஒரு சிலருக்கு புரியாது என்பதற்க்காக தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Can we use sandalwood oil
வணக்கம் உங்களுக்கு எந்த ஆயில் பிடிக்கிறதோ அதனை வாங்கி பயன்படுத்தலாம். நன்றி
Post a Comment