வணக்கம்!
கடந்த இரண்டு நாட்களாக கோயம்புத்தூர் திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு இன்று ஊருக்கு திரும்பிவந்துவிட்டேன். நேற்று திருச்செங்கோடு சென்று அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவில் சென்று தரிசனம் செய்து வந்தேன்.
பதிவில் நான் கோயம்புத்தூர் பகுதிக்கு வருகிறேன் என்று சொன்னவுடன் பல பேர்கள் முன்பே சொல்லிவிட்டார்கள். இரண்டு நாட்கள் அவர்களுக்கு மட்டும் தான் நேரம் ஒதுக்கவேண்டியிருந்த காரணத்தால் வருகின்ற தேதியை சொல்லவில்லை. பல நண்பர்கள் தொடர்புக்கொண்டார்கள் அனைவரையும் சந்திக்கமுடியவில்லை அடுத்தமுறை வரும்பொழுது தொடர்புக்கொள்கிறேன்.
ஒவ்வொரு நண்பர்களையும் எப்படியும் சந்தித்துவிடவேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஒவ்வொரு ஊரிலும் தங்கும் காலம் சிறிய காலமாக இருப்பதால் ஒவ்வொருவரையும் நேரம் ஒதுக்கி சந்திக்கமுடியவில்லை. படு பிஸியாக இருந்தாலும் எப்படியும் சந்தித்துவிடுவேன். முன்கூட்டியே எனக்கு தெரிவித்துவிடுங்கள்.
இந்த மாதத்தில் பல சோதிடதகவல்கள் உங்களுக்காக வரபோகின்றது. ஒவ்வொருவரும் தினமும் ஜாதககதம்பத்திற்க்கு வந்து படித்துவிடுங்கள். ஏதாவது இலவச பரிகாரமும் நடத்த திட்டமிட்டுள்ளேன் அதனால் தினமும் வாருங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
வாழ்க வளமுடன்
Post a Comment