வணக்கம்!
பெரும்பாலும் பூசநட்சத்திரத்தில் ஒரு கிரகம் சென்றுக்கொண்டு இருந்தால் அந்த கிரகத்தின் பலன் கொஞ்சம் குறைவாக தான் இருக்கின்றது. பல பேர்களுக்கு அனுபவத்தில் இதனை பார்த்து இருக்கிறேன்.
சோதிடவிதியில் இதனைப்பற்றி சொல்லியுள்ளார்களா என்பதைப்பற்றி தெரியாது ஆனால் அனுபவத்தில் பூசநட்சத்திரத்தில் செல்லும் கிரகங்கள் தங்களின் பலனை குறைவாக கொடுக்கிறது.
பூசநட்சத்திரம் வரும் நாட்களில் கூட மந்த நிலையை ஏற்படுத்தும் அதாவது பரப்பரப்பு இல்லாமல் இருக்கும். பூசம் சனியின் நட்சத்திரம் என்பதால் அப்படி இருக்கலாம். சனி மந்தக்காரகன் அல்லவா அதனால் மந்தநிலை ஏற்படும்.
உங்களின் ஜாதகத்தில் பூசநட்சத்திரத்தில் ஒரு கிரகம் சென்றுக்கொண்டிருந்தால் அந்த கிரகத்தின் பலன் குறைவாக கொடுக்கும் அதற்கு பரிகாரம் செய்யவேண்டும்.
சனி கிரகத்தை அதிகப்படுத்த செவ்வாய கிரகத்திற்க்கு பரிகாரம் செய்யவேண்டும். தை பூச நட்சத்திரத்திற்க்கு முருகன் கோவில் எல்லாம் விஷேசமாக இருக்கும் அல்லவா. அதுபோல் நீங்களும் முருகனுக்கு பரிகாரம் செய்து வலுப்படுத்திக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment