வணக்கம்!
ஒரு சில மக்களிடம் அதிக பொறாமை இருக்கும். முக்கால்வாசி பேர்களிடம் பொறாமை இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். எதற்கு எடுத்தாலும் பொறாமைபடுபவர்களாகவே இருக்கின்றனர்.
ஒரு சில காலக்கட்டத்திற்க்கு முன்பு இது கிராமபுறங்களில் தான் இருந்தது. தற்பொழுது இது நகர்புறங்களிலும் இருக்கின்றது. மூன்றாவது வீடு உங்களின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் காட்டக்கூடிய ஒரு வீடாக இருக்கும்.
மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் உங்களின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களோடு அதிக பொறாமைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் இதற்கு எல்லாம் கவலைப்படாமல் இருந்தாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் துணையும் வேண்டும் அல்லவா.
உங்களின் அவசர தேவைக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் உடனே உதவ முடியும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உங்களின் மேல் பாசத்தோடு நடப்பதற்க்கு நீங்கள் அடுத்தவர்களை பார்த்து பொறாமைபடாமல் இருக்கவேண்டும்.
ஒரு சில மூன்றாவது வீட்டில் சனி இருக்கும் நபர்கள் அடுத்தவர்களை பார்த்து அதிக பொறாமைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் இவர்களுக்கு நிறைய பிரச்சினையை அடுத்தவர்களிடம் வாங்கிக்கொள்கின்றனர்.
மூன்றாவது வீட்டில் சனி இருக்கும் நபர்களும் அதிக பொறாமைக்கொள்கின்றனர். இவர்களை பார்த்தும் அடுத்தவர்களும் பொறாமைக்கொள்கின்றனர். இதனை அறிந்துக்கொண்டு நீங்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment