வணக்கம்!
பெரும்பாலும் பெண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு பலம் பெறக்கூடாது என்பார்கள். இதுவும் தற்பொழுது உள்ள காலத்தில் இதனை பார்க்கவேண்டியதில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றார்கள்.
பெண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அந்த பெண் ஆண்களை போலவே செயல்படுவார்கள். எதற்கும் பயப்படாமல் அவர்கள் இஷ்டம் போலவே செயல்பட்டுக்கொண்டு இருப்பார்கள். வீட்டில் ஒருவரின் பேச்சையும் கேட்கமாட்டார்கள்.
ஒரு சில இளைஞர்கள் என்னிடம் வந்து சொல்லிருக்கின்றனர். என் மனைவி எதனை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்று சொல்லுகிறார். நான் என்ன செய்வது என்று கேட்பார்கள். அவர்களின் மனைவியின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு பலம் பெற்று காணப்படுவதால் தான் இப்படி இருக்கின்றனர்.
இன்றைய காலத்தில் அனைவரும் இதுபோலவே இருப்பதற்க்கும் இந்த தகவல் தொழில்நுட்பமும் ஒரு காரணமாகவே இருக்கின்றது என்று சொல்லலாம். அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டு ஒருவர் சும்மா இருப்பார்களா அதனால் தான் தைரியமாக இருக்கின்றனர்.
ஒரு சில ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு பலம் இழந்து காணப்படும். இவர்கள் பெண்கள் போலவே செயல்படுவார்கள். பெண்களுக்குள்ள வெட்கம் போன்றவை காணப்படும். எந்த ஒரு செயலையும் வேகமாக செய்யமாட்டார்கள்.
ஆண்மைதனம் ஆண்களுக்கு மின்னவேண்டும் என்பார்கள் அல்லவா. இவர்களுக்கு பெண்கள் தனம் தான் மின்னும். ஒரு சில பெற்றோர்கள் கூட இதனை என்னிடம் சொல்லிருக்கின்றனர். என் பையன் பெண் பிள்ளை போலவே இருக்கிறான் என்பார்கள் இதற்கு எல்லாம் மூன்றாவது வீடு பலம் இழந்து காணப்படுபவதும் ஒரு குறை என்று சொல்லலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment