வணக்கம்!
மூன்றாவது வீட்டில் அமரும் சனி தன்னுடைய பார்வையை ஐந்தாவது வீட்டிற்க்கும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் செலுத்திவிடும். சனி மூன்றில் அமரும் வீட்டை விட அது பார்க்கும் வீட்டிற்க்கு அதிகமாகவே கவனம் எடுத்துக்கொண்டு நாம் பலனை பார்ப்பது நல்லது.
மூன்றாவது பார்வையாக ஐந்தாவது வீட்டை பார்ப்பதால் பூர்வபுண்ணியம் கெடும் என்று சொல்லலாம். பூர்வபுண்ணியம் கெட்டால் நிறைய தடைகளை அது கொடுத்துவிடுகின்றது. எந்த காரியத்தை எடுத்தாலும் அது தடையோடு தான் செய்யவேண்டியிருக்கும்.
விரைய வீட்டிற்க்கு சனியின் பார்வை கிடைப்பதால் எந்த காரியமும் அதிகமான் செலவுகளை கொண்டுவந்துவிடும். ஒரு வேலையை செய்தால் அவர்க்கு அதனைவிட பல மடங்கு நஷ்டம் ஏற்பட்டு கவலை அடைய செய்யும்.
மூன்றாவது வீட்டில் நல்ல படியாக அல்லது உச்சம் பெற்று அமைந்தாலும் கூட இந்த பலனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். சனி என்பது ஒரு தீயகிரகம். தீயகிரகத்தின் பார்வையில் படும்வீடு நாசம் அடையும் என்பது பொதுவான பலன்.
இன்றைக்கு கூட ஒரு ஜாதகத்தின் பலனை ஒருவருக்கு சொன்னேன். அவர்களுக்கு சனி மூன்றில் தான் இருந்தது. பல சோதிடர்கள் இந்த ஜாதகருக்கு ஆபத்து குறைந்த வயது என்று சொல்லிருக்கின்றார்கள். நான் அவர்களிடம் சொன்னேன் நல்ல ஆயுள் இருக்கின்றது என்று சொன்னேன்.
மூன்றாவது வீட்டில் சனி அமர்ந்தால் எட்டாவது வீட்டிற்க்கு எட்டாவது வீடாக மூன்றாவது வீடு வரும் அதில் அமரும் சனி ஜாதகருக்க நல்ல ஆயுளை கொடுக்க கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதால் நல்ல ஆயுள் இருக்கும் என்று சொல்லிருக்கிறேன்.
மூன்றாவது வீட்டில் சனியைப்பற்றியே சொல்லிக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கவேண்டாம். இதன் பார்வையும் நாம் தெரிந்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும் என்பதற்க்காக கூறினேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment