Followers

Tuesday, May 7, 2019

இளைய சகோதரை காட்டும் மூன்றாவது வீடு



வணக்கம்!
          மூன்றாவது வீடு என்பது இளைய சகோதரத்தை காட்டக்கூடிய ஒரு அமைப்பு. மூன்றாவது வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தால் அவர்களுக்கு இளம் சகோதர்கள் இருக்கமாட்டார்கள் அப்படியே இருந்தால் அவர்கள் வீணாக போய்விடுவார்கள்.

நான் பார்த்தவரையில் இப்படிப்பட்ட ஜாதக அமைப்புடையவர்களுக்கு இளம் சகோதர்கள் பிறப்பின்பொழுதே மருத்துவமனையில் சில நாட்கள் தங்கவைத்து மருத்துவம் பார்த்து அதன்பிறகு வீட்டிற்க்கு வருவது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துவார்.

உங்களுக்கு மூன்றாவது வீடு என்பது இளைய சகோதர்களுக்கு லக்கனமாக வரும் லக்கனத்தில் தீயகிரகங்கள் இருந்தால் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும். பெரும்பாலான நபர்களுக்கு வளர்ச்சியே இல்லாமல் இருந்துக்கொண்டு இருக்கும்.

உங்களின் சிபாரிசில் நீங்கள் ஒரு வேலைக்கு உங்களின் சகோதரை அனுப்பி வைத்தால் உங்களின் பெயரை கெடுத்துவிட்டு வந்துவிடுவார். அவர்க்காக நீங்கள் அவமானப்படுவது போலவே இருக்கும். முக்கால்வாசி சகோதர்களுக்கு வேலை செய்யவே பிடிக்காமல் இருக்கின்றது.

உங்களின் ஜாதகத்தில் வந்து அமரும் தீயகிரகம் நன்றாக அமைந்தால் உங்களின் சகோதர்க்கு பிரச்சினை இல்லாமல் இருப்பார். தீயகிரகம் நன்றாக அமரவில்லை என்றால் அதனால் உங்களின் சகோதர்க்கு ஆபத்து தான் உருவாக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: