Followers

Saturday, May 4, 2019

வைராக்கிய மனதை தரும் மூன்றாவது வீடு


வணக்கம்!
          ஆன்மீகவாதிகளின் மனது என்பது வைராக்கியம் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். ஒரு விசயத்திலேயே நம்பிக்கை வைத்து அந்த நம்பிக்கையை கடைசி வரை வைப்பது வைராக்கியமான ஒன்றாகவே கருதவேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளுக்கும் இந்த வைராக்கிய எண்ணம் என்பது இருக்கும்.

வைராக்கியமான எண்ணம் இல்லாதவர்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு வரவே முடியாது. மனதை திடப்படுத்தி வைக்கும் காரத்துவத்தையும் மூன்றாவது வீட்டை வைத்து தான் கணிக்கவேண்டும். மூன்றாவது வீட்டில் பெரும்பாலும் கேது இருக்கும் நபர்களுக்கு நல்ல ஆன்மீக ஞானம் கிடைக்கும்.

இளம்வயதில் தோஷமாக இருந்தாலும் வளர வளர இது ஞானத்தை கொடுத்துவிடுகின்றது. கஷ்டபடாமல் ஞானத்தை நோக்கி செல்வது என்பது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும். நிறைய கஷ்டத்தை இளம்வயதில் பார்ப்பவர்களுக்கு நல்ல ஞானம் இருக்கும்.

கேது தோஷத்தை கொடுத்து அவர்களின் இளம்வாழ்க்கையை வீணாக்கினாலும் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு நல்ல வைராக்கியமான எண்ணத்தோடு அவர்கள் விளங்குவதற்க்கு இந்த மூன்றாவது வீட்டில் கேது இருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது.

ஆன்மீகத்தில் தான் வைராக்கியம் வைக்கவேண்டும் என்பதில்லை வேறு விதத்திலும் வைராக்கியம் வைப்பவர்களும் இருக்க தானே செய்கின்றனர். காதல் விசயத்தில் வைராக்கியம் வைப்பவர்களும் இருக்கதான் செய்கின்றனர். 

நான் காதலித்த பெண்ணை அல்லது ஆணை திருமணம் தான் செய்வேன் மற்றவரை நான் திருமணம் செய்யமாட்டேன். நான் இப்படியே காலத்தை தள்ளுவேனை தவிர நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லுபவர்களும் இருக்கதான் செய்கின்றனர்.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு இப்படிப்பட்ட வைராக்கியமான மனது இருக்கின்றது என்பதை நான் பார்த்து இருக்கிறேன். இந்த வைராக்கியமான மனதை கொடுப்பதும் மூன்றாவது வீடாக தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: