வணக்கம்!
ஒரு புனிதமான காரியம் என்றால் அது இறந்தவர்களின் வீட்டிற்க்கு சென்று துக்கம் விசாரிப்பது அதோடு அந்த இறந்த உடலை அடக்கம் செய்வதற்க்கு சென்று உதவதும் மிக மிக புனிதமான ஒன்று. இதனை நாம் செய்தால் நம்முடைய அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.
ஒரு கோவிலுக்கு செல்வதை விட இந்த காரியம் மிக மிக புனிதம் என்று தான் சொல்லவேண்டும். இந்த காலத்தில் ஒரு உறவினர்கள் இறந்தால் கூட வேலை இருப்பதால் வரமுடியவில்லை என்று அதனை தவிர்க்கும் நபர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
மனிதனாக பிறந்தால் கண்டிப்பாக அவனுக்கு இறப்பு என்பது ஒன்று இருந்து தான் ஆகவேண்டும். இந்த பூமியில் ஒரு உயிர் உருவத்தோடு வந்து அந்த உயிர் போகுது என்றால் முடிந்தவரை நாம் அதில் பங்குக்கொள்ளவேண்டும்.
உங்களால் முடிந்தவரை இதில் பங்குக்கொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுங்கள். கண்டிப்பாக இதில் நீங்கள் கலந்துக்கொண்டால் உங்களின் வாழ்க்கை சிறக்கும். பல தோஷங்கள் இதனால் போகின்றது என்பதும் அனுபவத்தில் தெரியவருகின்றது.
சிவனின் முழுமையான அருளை பெறுவதற்க்கு இந்த காரியத்தை நீங்கள் செய்தால் போதுமானதாகவே தோன்றுகின்றது. நாம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை விட ஒரு இறப்பில் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை சென்று வந்தாலே போதுமானது சிவனின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment