வணக்கம்!
இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தது எதில் நடக்கின்றதோ இல்லையோ அவர்களின் காதல் விவகாரத்தில் கண்டிப்பாக நடந்துவிடுகின்றது. அவர்களின் விரும்பம் போல ஒரு பையனை தேர்ந்தெடுத்து மணம்புரிந்துக்கொள்கின்றனர். இது நல்லபடியாக சென்றால் நல்லது தான் ஆனால் முக்கால்வாசி பேர் இதில் சிக்கலில் தான் இருக்கின்றனர்.
காதல் திருமணத்திற்க்கு எதிர்ப்பு என்பதை காட்டவில்லை அவர்களின் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடுவதில்லை. நீண்டகாலம் வாழவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். பெண்களை பெற்ற பெற்றோர்கள் அவர்களின் ஜாதகத்தை நன்றாக அலசி பார்த்து விடவேண்டும்.
தற்பொழுது காதல் திருமணங்கள் ஏதோ ஒரு நோக்கத்திற்க்காக நடைபெறுகின்றது. பெண்களை குறிவைத்து பல மோசமானவர்களும் இதனை நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒன்றுமே இல்லாதவர் நன்றாக வளர்ந்தவர்களை வளைத்துவிடுகின்றனர்.
உங்களின் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் ஜாதகத்தை நீங்கள் பார்த்து தெரிந்துக்கொண்டால் உங்களால் உங்களின் வாரிசுகளுக்கு சரியான ஒரு வரனை தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். அவர்களே தேர்ந்தெடுந்து வீணாக போய்விடுவதை விட நீங்களே ஒன்றை நன்றாக தேர்ந்தெடுக்கலாம்.
பெண்கள் திருமணம் செய்த பிறகு அந்த மாப்பிள்ளை நல்லவரா அல்லது கெட்டவரா என்று ஜாதகம் பார்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். திருமணம் முடிந்தபிறகு இதனை பார்ப்பது வீணான ஒரு வேலை என்பதால் இதனை தவிர்க்க முயலுங்கள். காதலித்துக்கொண்டே இருந்தால் கூட அந்த நேரத்தில் ஜாதகம் பார்ப்பது கூட உங்களுக்கு பயன்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment