Followers

Sunday, May 5, 2019

கடவுள் அனுப்பும் ஆள்


வணக்கம்!
          ஒருவர் வந்து உங்களிடம் பிச்சை கேட்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். உடனே உங்களுக்கு தர்மம் செய்யவேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட்டால் அது புண்ணியம். அவர் பிச்சை கேட்டவுடன் அவரைப்பற்றி ஒரு கணிப்பை உங்களின் மனது போட்டுவிட்டு அதன்பிறகு தர்மம் செய்வது தவறான ஒன்றாகவே இருக்கும்.

இவன் நன்றாக தானே இருக்கிறான் இவனுக்கு என்ன வந்தது இவனுக்கு தர்மம் செய்யவேண்டும் என்று உங்களின் மனது எடைபோட்டால் பிச்சை கேட்பவனின் கர்மாவை நீங்கள் வாங்கிக்கொள்வது போலவே இருக்கும். ஒரு சிலர் பார்க்கும் பார்வையிலேயே கணக்கை போட்டுவிடுவார்கள்.

ஒருவன் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளியது கிரகங்களின் வேலையாக தான் இருக்கும். அவனின் நிலைக்கு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. நீங்கள் பிச்சை போடுங்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள் ஆனால் பிச்சை போடும்பொழுது கணக்கு போடுவது ஒரு தவறான ஒன்றாகவே இருக்கின்றது.

பல இடத்தில் இதனை நான் நேரிடையாகவே பார்த்து இருக்கிறேன் அதாவது வெளிப்படையாகவே பேசுவார்கள். உடம்பு நன்றாகவே தானே இருக்கின்றது இவன் உழைத்து சாப்பிட்டால் என்ன இதனை எல்லாம் தடுக்க ஒரு சட்டம் இல்லையா என்று எல்லாம் பேசுவார்கள். 

நான் சொல்லுவது பிச்சை மட்டும் இல்லை பல இடங்களில் பல்வேறு வேலைகளிலும் தினமும் நடைபெறும் ஒரு செயலாகவே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தை கொண்டு உங்களிடம் வந்து ஒன்றை கேட்கின்றார்கள் என்றால் அதற்கு ஒன்று ஆம் என்று சொல்லவேண்டும் இல்லை என்று சொல்லவேண்டும்.

ஒருவரை போட்டு இழுக்கப்படுவது அல்லது அவரைப்பற்றி சிந்தனை செய்து அதாவது கணக்குபோட்டு பார்ப்பது எல்லாமே பிறரின் கர்மாவை வாங்கும் ஒரு செயலாகவே இருக்கும். இதனை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொண்டு செயல்படும்பொழுது உங்களின் வாழ்க்கை நன்றாக அமையும்.

நம்முடைய கர்மாவை வாங்கிக்கொள்ள கடவுளே ஒரு ஆளை தேர்வு செய்து இப்படி அனுப்புகின்றார்கள். பல இடங்களில் பல நேரங்களில் இதனை நானே உணர்ந்து இருக்கிறேன். கடவுள் நமக்கு கொடுக்கும் வாய்ப்பை நாம் தவறாக பயன்படுத்திக்கொள்ள கூடாது என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: