வணக்கம்!
இன்றைய காலத்தில் மனிதர்கள் முயற்சி செய்கின்றனர் ஆனால் அந்த முயற்சி எடுத்தால் அது தடை ஏற்பாடாமல் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். தடை ஏற்பட்டால் எடுக்கும் முயற்சியில் தோல்வியை சந்திக்க நேரிடும். ஒரு தொடர்ச்சியான தோல்வியாக இருக்கும்பட்சத்தில் எடுக்கும் முயற்சியில் கடுப்பாகிவிடும்.
ஒருவருக்கு ஏற்படும் தடை என்பது அவர்களின் உடலும் ஒரு காரணமாக இருக்கின்றது. உடலில் உள்ள மூலதார இயக்கம் தடை ஏற்படும்பொழுது காரிய தடையும் ஏற்பட்டுவிடுகின்றது. மூலதாரத்தை சரிசெய்யும்பொழுது உங்களுக்கு காரிய தடை என்பது ஏற்படாது.
மூலாதாரத்தை சரி செய்யும் வழி என்பது யோகத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது. நீங்கள் ஒரு யோக பயிற்சி நிலையத்திற்க்கு சென்றால் உங்களுக்கு இந்த காரியதடையை சரிசெய்யும் பயிற்சியை கற்று தந்துவிடுவார்கள்.
என்னால் யோக வகுப்பிற்க்கு செல்லமுடியாது வேறு வழிகளை சொல்லுங்கள் என்று சொல்லும் நண்பர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு உங்களின் மூலாதாரத்தை சரி செய்து உங்களுக்கு காரியதடை என்பதை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
நாம் எந்த ஒரு பூஜை செய்தாலும் முதலில் விநாயகருக்கு பூஜை செய்த பிறகு தான் அடுத்த பூஜையை தொடங்கவேண்டும் என்று சொல்லுவார்கள். விநாயகருக்கு பூஜை செய்துவிட்டால் அது காரியதடை இல்லாமல் நடைபெறும் என்பதற்க்காக தான் சொல்லிருக்கின்றனர்.
இது எல்லாம் எங்களுக்கு முன்பே தெரியும் நீங்கள் வித்தியாசமாக சொல்லுங்கள் என்று கேட்பவர்களும் இருக்கதான் செய்வார்கள். யோகத்திற்க்கு சென்றும் காரியதடை வருகின்றது என்று சொல்லுவார்கள்.
விநாயகர் வழிபாட்டை சரியாக செய்யாமல் இருந்தாலும் யாேகத்தை ஒழுங்காக கற்க முடியாமல் இருந்தாலும் இந்த பிரச்சினை வருகின்றது. சரியான ஒரு குருவை நாடி யோககலையை கற்றுக்கொள்ளுங்கள். விநாயகர் பக்தர் இருப்பார்கள் அவர்களிடம் ஆசி பெற்று விநாயகர் மந்திரம் மற்றும் வழிபாட்டை செய்யுங்கள் இது சரியாகும்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். கல்வி உதவி தொகை அனுப்பவிரும்பும் நண்பர்கள் அனுப்பலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment