வணக்கம்!
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தையும் கொண்டாடவேண்டும் தெய்வத்தையும் கொண்டாடவேண்டும். இரண்டையும் கொண்டாடும்பொழுது தான் நமக்கு நல்லதை செய்யும் என்பார்கள்.
ஒவ்வொரு குழந்தையும் அது வளரும் சூழ்நிலையை பொறுத்து அதன் வாழ்க்கை அமையும். பிறந்த குழந்தைக்கு உலகத்தை பார்க்கும் விதத்தை அவர்களின் பெற்றோர்கள் தான் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். நல்ல விதமாக ஒரு சூழ்நிலையை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அது நன்றாக வளரும்.
சூழ்நிலை சரியில்லாமல் வளர்ந்தால் அது போலவே தான் குழந்தையின் எதிர்காலம் இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரியாக உள்ளவர்கள் தான் நாம் கொடுக்கும் விதத்தில் தான் அவர்களின் அறிவு வளர்ச்சி இருக்கும்.
நீங்கள் சரியில்லாமல் ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிட்டு குழந்தையா இது மக்கு போலவே இருக்கின்றது என்று சொன்னால் கண்டிப்பாக தவறு உங்களுடையது. ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுக்காமல் விட்டது உங்களின் தவறாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிட்டு அதன்பிறகு அந்த குழந்தை படிப்பில் சரியில்லை என்றால் அப்பொழுது சோதிடத்தில் மூன்றாவது வீட்டை பார்த்து எப்படி வேலை செய்கின்றது என்று பார்க்கவேண்டும்.
ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாலும் உங்களின் முதலீடு அதிகபட்சம் உங்களின் குழந்தை மேலே செய்து உங்களின் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சூழ்நிலையில் உள்ள கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுங்கள். ஜாதககதம்பத்தில் உள்ளவர்கள் முக்கால்வாசி பேர் நல்ல சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒரு சிலர் மட்டும் அவர்களின் குழந்தையை அவர்களே கெடுத்து இருக்கின்றனர்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment