Followers

Tuesday, May 21, 2019

அண்ணன் தம்பி வாழ்க்கை


வணக்கம்!
          பொதுவாகவே நாம் எல்லாேருரிடம் சொல்லும் வார்த்தை தொடர்ச்சியாக டச்சில் இருந்துக்காெண்டே இருங்கள் என்று சொல்லுவது உண்டு. தொழில் செய்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒருவர் ஒரு தொழில் தோல்வியை தழுவி வரும்பொழுது அவர்களிடம் நான் சொல்லுவது நல்ல நிலைக்கு வந்த பிறகு எனது போனை எடுக்காமல் இருக்ககூடாது என்பேன். 

மனிதனின் குணம் தெரிந்து தான் நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். அவன் பிரச்சினை முடிந்து அதன் பிறகு அவனின் குணம் மாறிவிடும். எத்தனையே பேரை பார்த்துக்கொண்டு தொழில் செய்துக்கொண்டு இருக்கின்ற எங்களுக்கு தெரியாதா இவர்களை எங்கு பிடித்தால் எங்கள் வழிக்கு வருவார் என்று தெரிந்து தான் செய்வேன்.

மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இளைய சகோதர சகோதரிகளை காட்டும் வீடு என்பது உங்களுக்கு தெரியும். உங்களின் வீட்டில் இரண்டு வாரிசுகள் இருந்தால் இரண்டில் ஒருவர் மட்டும் தான் நன்றாக இருப்பார். மற்றோருவர் வாழ்க்கை அந்தளவுக்கு சோபிக்காது.

அண்ணன் தம்பி இருவரும் நன்றாக வாழ்வார்கள் என்பது கண்டிப்பாக நடக்கவே நடக்காது. நூற்றில் ஒன்று இரண்டு பேர் நன்றாக வாழலாம். இரண்டில் பேரில் ஒருவர் வாழ்க்கையில் தோல்வியை தழுவார்கள். ஒருவர் நன்றாக இருந்தால் கூட ஒருவர் நன்றாக வாழமாட்டார்கள்.

உங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தையை நன்றாக கவனித்து பாருங்கள். இரண்டில் ஒன்று சோபிக்காது. சுணக்கமாகவே வாழ்க்கை அவர்களுக்கு அமையும். முதலில் மற்றவர்களை நன்றாக கவனித்து பாருங்கள் உங்களுக்கு இது புரியவரும்.

ஒருவருக்கு மூன்று பேர் இருந்தால் நடுவில் பிறந்திருப்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் நன்றாக இருக்காது. அவர்களுக்கு இயற்கை அந்தளவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்காது. அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருக்கும்பொழுது தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்காது. தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்கும்பொழுது அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருக்காது.

உங்களுக்கு இரண்டு குழந்தை இருந்து அந்த குழந்தை நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் ஜாதகத்தில் தொடர்ச்சியாக ஒரு ஈடுபாட்டை வையுங்கள் என்று மட்டும் சொல்லுவேன். ஒரு திமிராகவே இதனை சொல்லுகிறேன் நீங்கள் எங்கு சென்றும் இதற்கு பரிகாரம் தேடமுடியாது என்னை நம்பினால் மட்டும் இதற்கு வழி இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: